என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருச்சியில் இளம் பெண் தற்கொலை
  X

  திருச்சியில் இளம் பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியை அடுத்த அன்னசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் செம்பருத்தி (வயது 25).
  • கணவர் வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். அதற்கு செம்பருத்தி தீபாவளி முடிந்த பின் வேலைக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

  திருச்சி

  திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியை அடுத்த அன்னசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் செம்பருத்தி (வயது 25). இவருக்கும் வெள்ளைச்சாமி என்பவருக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஐந்து மாத ஆண் குழந்தை உள்ளது.

  இந்நிலையில் கணவர் வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். அதற்கு செம்பருத்தி தீபாவளி முடிந்த பின் வேலைக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

  ஆனால் அதையும் மீறி வெள்ளைச்சாமி கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த செம்பருத்தி விஷ விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

  இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக செம்பருத்தியை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செம்பருத்தி சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.

  இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியரின் விசாரணையும் நடைபெறுகிறது.

  Next Story
  ×