search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலை மலர் செய்தி எதிரொலியால் பெயர்ந்துபோன ஸ்ரீரங்கம் பிரதான பேருந்து நிறுத்தம் பகுதி சீரமைப்பு
    X

    'மாலை மலர்' செய்தி எதிரொலியால் பெயர்ந்துபோன ஸ்ரீரங்கம் பிரதான பேருந்து நிறுத்தம் பகுதி சீரமைப்பு

    • ‘மாலை மலர்’ செய்தி எதிரொலியால் பெயர்ந்துபோன ஸ்ரீரங்கம் பிரதான பேருந்து நிறுத்தம் பகுதி சீரமைக்கப்பட்டது.
    • பணிகள் தொடங்கியுள்ளன

    திருச்சி:

    உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வந்து செலும் நிலையில், அங்குள்ள பிரதான பஸ் நிறுத்த பகுதி சுகாதார சீர்கேடுகள் மிகுந்து காணப்பட்டது.

    இது உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்களையும், குறிப்பாக கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களையும் முகம் சுழிக்க வைத்தது. இந்த பேருந்து நிறுத்தத்தின் தரை பகுதி மிகுந்த உடைந்து பெயர்ந்து போய் கிடந்தது. இதன் பின்புறம் செல்லும் திறந்தவெளி சாக்கடையால் துர்நாற்றம் வீசியது. இதனால் அங்கு அதக அளவில் ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

    மேலும் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால் பொதுமக்களும், பக்தர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் ஸ்ரீரங்கம் பிரதான பேருந்து நிறுத்தத்தை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என்றும், ஸ்ரீரங்கம் நகர பேருந்துகள் நிறுத்துமிடத்தை நிரந்தரமாக்கவேண்டும், பஸ் நிலையம் அமைக்க வேண்டும், ராகவேந்திரா வளைவு எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தை அகற்றி அதில் பேருந்து நிறுத்தத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்தன.

    இதுதொடர்பாக மாலை மலர் நாளிதழில் கடந்த 7-ந்தேதி பெயர்ந்து கிடந்த பேருந்து நிறுத்தம் குறித்த செய்தி வெளியானது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் வகையில் கைமேல் பலனாக மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    உடனடியாக அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில் பணிகள் தொடங்கியுள்ளன. ஜல்லி கற்கள், சிமெண்டு கலவை கொட்டப்பட்டு பெயர்ந்து போன தரை செம்மைப்படுத்தப்படுகிறது. இதற்கு ஸ்ரீரங்கம் பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்து வரவேற்றுள்ளனர்.

    Next Story
    ×