search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி அறிவாளர் பேரவை சார்பில் கருத்தரங்கம் - துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பங்கறே்பு
    X

    திருச்சி அறிவாளர் பேரவை சார்பில் கருத்தரங்கம் - துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பங்கறே்பு

    • தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையம், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி அறிவாளர் பேரவை இணைந்து நடத்திய இந்திய விடுதலைத் திருநாள் சிறப்பு கருத்தரங்கம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அரங்கில் நடைபெற்றது
    • பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பா. இராஜ்குமார் வரவேற்று பேசினார்.

    திருச்சி,

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையம், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி அறிவாளர் பேரவை இணைந்து நடத்திய இந்திய விடுதலைத் திருநாள் சிறப்பு கருத்தரங்கம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

    தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். திருச்சி திருக்குறள் கல்வி மையத்தின் தலைவர் திருக்குறள் சு.முருகானந்தம் 'விடுதலைப் போரில் தமிழக வீரர்களின் பங்களிப்பு' என்னும் தலைப்பிலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவரும் இயக்குனருமான பேராசிரியர் ந.மணிமேகலை 'விடுதலைப் போரில் தமிழக வீராங்கனைகளின் பங்களிப்பு' என்னும் தலைப்பிலும் பேசினர்.

    முன்னதாக பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பா. இராஜ்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பால் தயாபரன் முன்னிலை வகித்தார். திருச்சி அறிவாளர் பேரவையின் ஆலோசகர் செ. அசோகன், திருச்சி பனானா லீப் உணவக உரிமையாளர் இரா.மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய இணை இயக்குநர் செ.கற்பகம் இணைப்புரை வழங்கினார். திருச்சி அறிவாளர் பேரவையின் பொதுச் செயலாளர் வீ.கோவிந்தசாமி, முன்னாள் பொதுச் செயலாளர் நொச்சியம் ச.சண்முகநாதன், துணைத்தலைவர் பேராசிரியர் சு.செயலாபதி, பொருளாளர் பன்முக கலைஞர் த.முருகானந்தம், கவிஞர் வல்லநாடன், இல.கணேசன்,

    இலால்குடி அரங்க. திருமாவளவன், பேராசிரியர்கள் கிராமியன், தே.சம்பத், தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் கிருஸ்துமணி, ஜோதிலட்சுமி, யோகா கோபிநாத் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் பல்கலைக்கழக தமிழ் பண்பாட்டு மையத்தின் இயக்குனரும் கட்டடக் கலைத்துறை தலைவரும் திருச்சி அறிவாளர் பேரவையின் தலைவருமான க.திலகவதி நன்றி கூறினார்.

    Next Story
    ×