என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் போராட்டம்
  X

  மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி வேண்டி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
  • பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை தடுத்து நிறுத்த வேண்டும்.

  திருச்சி:

  அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளி பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி வேண்டி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

  மாணவரணி தலைவர் சமீர் பாட்ஷா தலைமை தாங்கினார்.செயலாளர் முகமது இப்ராகிம் முன்னிலை வகித்தார். கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா, செயலாளர் ஜனுல்லா மகுது, பொருளாளர் உசேன் ஷரீப் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

  மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகமது மீரான், தமிழ் மாநில தலைவர் காஜா முகைதீன்,பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

  இதில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மனித சங்கிலி போராட்டத்தில் பெண்களும் பங்கேற்றனர்.

  Next Story
  ×