search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
    X

    ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

    • ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு, பழைய பென்சன் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
    • ஜெபமாலைபுரம் நகர கிளைகள் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி போக்குவரத்து சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    போக்குவரத்து தொழிலா ளர்களின் 14- வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி தீர்வு காண வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு, பழைய பென்சன் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர கிளைகள் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி போக்குவரத்து சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு சங்க பொதுச் செயலாளர் கஸ்தூரி, ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை தலைமை வகித்தனர். ஏ. ஐ .டி. யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    போக்குவரத்து சம்மே ளன துணை தலைவர் துரை.மதிவாணன், புதுக்கோட்டை கழக ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் சக்திவேல், டி.என்சி.எஸ்சி. ஏஐடியூசி மாநில பொருளாள ர்கோவிந்தராஜன், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தி ல்நாதன், வங்கி ஊழியர் சங்க நிர்வாகி கோவிந்தன், சங்க நிர்வாகிகள் சேகர், தங்கராஜ், சண்முகம், ராஜமன்னன், ரெங்கதுரை, பொறியாளர்முருகையன், வெங்கடபிரசாத் ஆகியோர் விளக்க உரையா ற்றினார்கள். மின்வாரிய சம்மேளன மாநில துணை தலைவர் பொன்.தங்கவேல் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்முடிவில் பொருளாளர் தாமரை செல்வன் நன்றி கூறினார்.

    Next Story
    ×