search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
    X

    மேலூரில் இருசக்கர வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    சாலையோர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

    • மேலூரில் சாலையோர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் வழியாக சென்னை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கைக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு மேலூர் பஸ் நிலையம் வழியாக வாகனங்கள் வந்து செல்கின்றன.

    சராசரியாக நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் மேலூர் வழியாக செல்கிறது. மேலூர் பெரிய கடைவீதி, செக்கடி பஜார் சந்திப்பு முதல் பஸ் நிலையம் வரையிலும், அதே போல் பஸ் நிலையத்தில் இருந்து யூனியன் அலுவலகம் வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பஸ் நிலைய பகுதியில் தான் தாலுகா அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றப்பிரிவு நடுவர் நீதிமன்றம், சப் கோர்ட், காவல் நிலையம், 2 ஆயரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. மேலூர் பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது.

    அதேபோல காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி நேரங்களில் அழகர் கோவில் ரோடு-பிள்ளையார் கோவில் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    அதேபோல சிவகங்கை சாலை-திருவாதவூர் சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, இது போதாது என்று மேலூரில் இருந்து மதுரை செல்லும் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் மற்றும் பழ வியாபாரம் செய்யும் தள்ளுவண்டிகள் வரிசையாக சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதசாரிகள் ரோட்டை கடப்பது உயிரை கையில் பிடித்துச் செல்ல வேண்டிய அவல நிலையாக உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்புகளால் மற்றும் நெரிசலால் அடிக்கடி இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலூரில் ஏற்படும் நெரிசலுக்கு பயந்து சில அரசு பஸ்கள் நகருக்குள் வராமல் பைபாஸ் வழியாக செல்கிறன. இதனால் பயணிகள் உரிய நேரத்தில் பஸ்களில் செல்ல முடியாத அவல நிலை உருவாகி உள்ளது.

    இனிமேலாவது மேலூர் பஸ் நிலையம்-ஆலங்குளம் ரோடு சந்திப்பு, செக்கடி பஜார், சிவகங்கைச் சாலை, பெரிய கடை வீதி ஆகிய இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×