search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க பொதுக்குழு கூட்டம்
    X

    உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் மாணவி ஒருவருக்கு ஊக்கத்தொகை வழங்கிய காட்சி.

    நெல்லையில் வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க பொதுக்குழு கூட்டம்

    • நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார்.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. சங்க தலைவர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் நாராயணன், முகமது அனிபா, கான்முகமது, பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச்செயலாளர் ஜவகர் வரவேற்று பேசினார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், மண்டல தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன், மாநில கூடுதல் செயலாளர் ஆர்.கே.காளிதாசன், செயலாளர் எம்.ஆர்.குணசேகரன், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கலந்து கொண்டு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார். மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், சொத்து வரி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாநகர ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×