என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் ரூ. 95½ லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்
- 1லட்சத்து 56ஆயிரத்து 626கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.65.66-க்கும், குறைந்தபட்சம் ரூ.53.16க்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்–தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
அதன்படி நேற்று 199 விவசாயிகள் 1லட்சத்து 56ஆயிரத்து 626கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.65.66-க்கும், குறைந்தபட்சம் ரூ.53.16-க்கும் கொள்முதல் செய்தனர்.
மொத்தம் ரூ.95 லட்சத்து 63ஆயிரத்து 579-க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.