search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்னணு கழிவுகளை மாநகராட்சியில் ஒப்படைத்து பணம் பெற்ற மாணவர்கள்
    X

     மின்னணு கழிவுகளை மாநகராட்சியில் ஒப்படைத்து மாணவர்கள். மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி , துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மின்னணு கழிவுகளை மாநகராட்சியில் ஒப்படைத்து பணம் பெற்ற மாணவர்கள்

    • பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் உள்ள பயன்படுத்தாத நிலையில் உள்ள பேட்டரி, கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இந்த முகாமில் கொடுத்து பணமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை தரம் பிரித்து அனுப்புவதன் மூலம் பொதுமக்கள் அதனை பணமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின்னணு கழிவுகளை ஆங்காங்கே விட்டுச் செல்லாமல் ஒருசேர சேகரிக்கும் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது . திருப்பூர் மாநகராட்சி மற்றும் துப்புரவாளன் அமைப்பு மூலம் துவங்கப்பட்ட இத்திட்டம் இன்றைய தினம் இரண்டாவது முறையாக சிறப்பு முகாமாக மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது . பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் உள்ள பயன்படுத்தாத நிலையில் உள்ள பேட்டரி ,கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இந்த முகாமில் கொடுத்து பணமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது .

    குப்பைகளை ஆங்காங்கே விட்டுச் செல்லாமல் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை தரம் பிரித்து அனுப்புவதன் மூலம் பொதுமக்கள் அதனை பணமாகவும் மாற்றிக் கொள்வதோடு இயற்கைக்கு கேடு விளைவிக்காத வகையில் அமைத்துக் கொள்ளலாம் எனவும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள் ,நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயன்படுத்தப்படாத மின்னணு கழிவுகளை இன்று மாநகராட்சியில் ஒப்படைத்து பணத்தை பெற்றுக் கொண்டனர் .இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி , துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×