search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள். 

    உடுமலை கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • ஆடி மாதம் ஆடிப்பெரும் விழா சிறப்பாக நடைபெறுகிறது.
    • 26 ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தன்வந்திரி ஹோமம் நடக்கிறது.

    உடுமலைட:

    உடுமலையின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடிப்பெரும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆடி திருவிழா ஆடி முதல் வெள்ளியையொட்டி காலை 11 மணிக்கு திருமஞ்சனம், உச்சிக்கால பூஜை நிகழ்ச்சிகளும் மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை வழிபட்டனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் சில பக்தர்கள் கம்பங்கூழ் தயாரித்து பாத்திரங்களில் கொண்டு வந்திருந்தனர். அதுவும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு. எஸ். எஸ். ஸ்ரீதர், செயல் அலுவலர் சி. தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    உடுமலை நேரு வீதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி மகாலட்சுமி ஹோமம் மாலை லலிதா சகஸ்ர நாம குங்கும அர்ச்சனை நடந்தது. 26 ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தன்வந்திரி ஹோமம் நடக்கிறது. 29ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீ துர்கா ஹோமமும்ஆகஸ்ட் 1ந் தேதி மாலை 6 மணிக்கு ஆடிப்பூரம் ஊஞ்சல் உற்சவம், தொடர்ந்து அம்மனுக்கு வளையல்அலங்காரம் நடைபெறுகிறது. ஆகஸ்டு 2ந்தேதி காலை 10 மணிக்கு திருப்புகழ் பாராயணமும் தொடர்ந்து காலை 11 மணிக்கு ஸ்தல விருட்ச பூஜை, வன்னி அத்தி மரத்திற்கு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×