என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பல்லடம் சைசிங் மில்லில் தீ விபத்து
  X

  பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலானதை படத்தில் காணலாம். 

  பல்லடம் சைசிங் மில்லில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மில்லில் இருந்த பஞ்சு மூட்டைகள் மீது தீ பற்றி மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
  • தீப்பிடித்து எரிந்ததில் கட்டிடத்தின் மேற்கூரைகள் வெடித்து சிதறியது.

  பல்லடம் :

  பல்லடம் அருகே உள்ள கரையாம்புதூர்,சக்தி நகரில் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான சைசிங் மில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை சைசிங் மில்லில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், மில்லில் இருந்த பஞ்சு மூட்டைகள் மீது தீ பற்றி மளமளவென தீப்பிடித்து எரிந்தது.

  இதில் ஏராளமான பஞ்சு மூட்டைகள, மற்றும் நூல் மூட்டைகள், இயந்திரங்கள், ஆகியவை தீப்பிடித்து எரிந்தன. மேலும், தீப்பிடித்து எரிந்ததில் கட்டிடத்தின் மேற்கூரைகள் வெடித்துச் சிதறியது. அந்தப் பகுதி எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து தகவலறிந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வண்டியுடன் தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், சுமார் 1 கோடி மதிப்பிலான, பஞ்சு, மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. பல்லடம் போலீசார் இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Next Story
  ×