search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு வீடுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
    X

    இல.பத்மநாபன் 

    புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு வீடுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

    • தி.மு.க.வில் 1 கோடி புதிய உறுப்பினர் சேர்க்க வேண்டும் என்று கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
    • குடியிருக்கும் முகவரியில் அல்லது தொழில் செய்யும் முகவரியில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் கட்சியின் பவள விழா ஆண்டை முன்னிட்டு தி.மு.க.வில் 1 கோடி புதிய உறுப்பினர் சேர்க்க வேண்டும் என்று கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் ஒவ்வொரு பூத் வாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்த வசதியாக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர வாக்குச்சாவடி குழு ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும். புதிய உறுப்பினராக சேர விரும்புவோர் அவரவர் குடியிருக்கும் முகவரியில் அல்லது தொழில் செய்யும் முகவரியில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். உறுப்பினராக சேர விரும்புவோர் உறுப்பினர் படிவத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். வாக்காளர் அட்டையில் உள்ள பெயர், எண், புகைப்படத்துடன் முதல் பக்கத்தை மட்டும் நகல் எடுத்து இணைக்க வேண்டும். மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஏதேனும் ஒருவர் பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் படிவங்களில் பரிந்துரை கையெழுத்திட தகுதியானவர்கள்.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள், தெருமுனை பிரசாரங்கள், வீடுதோறும் சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும். உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை அனைவரும் வெற்றியடையச்செய்ய வேண்டும். சட்டமன்ற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சட்டமன்ற தொகுதி வாரியாக சிறப்பிப்பார்கள். அவர்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×