என் மலர்
தூத்துக்குடி
- ஹெலிகாப்டர் மூலம் நெல்லையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றார் அமித்ஷா.
- மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றார்.
அங்கு, பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டு மேடைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தார்.
இந்த மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிகளின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
- மிஸ்டர் பி.எம். என்று நடிகர் விஜய் கூறுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.
- தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டாம்.
தூத்துக்குடி:
நெல்லையில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார்.
அங்கு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
மிஸ்டர் பி.எம். என்று நடிகர் விஜய் கூறுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு இவர் பேசுகிறார். மாநாட்டிற்கு பிளாக்கில் சாப்பாட்டிற்கு டிக்கெட் கொடுக்கிறார்கள். புதிய வரவு நம்மை ஒன்றும் செய்யாது. பா.ஜ.க. பலம் பொருந்திய கட்சியாக வந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கும், எங்களுக்கும் தான் போட்டி.
தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டாம். தாமரை தண்ணீரில் வளரப்போகுது, மலர போகுது, தாமரை இலையில் ஏன் ஒட்ட வேண்டும்? அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு பா.ஜ.க. வளரப்போகுது. தம்பி விஜய் இதனை பார்ப்பார்.
தமிழக முதலமைச்சர் அப்பா என்று கூப்பிட சொல்கின்றார். இவர் அங்கிள் என்ற குறிப்பிடுகிறார். விஜய்க்கு எழுதிக் கொடுத்தவர் அவ்வாறு எழுதி கொடுத்துவிட்டார் போல, நானே பயந்து விட்டேன்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பொருந்தாதது என்ற விஜய் கூறுகிறார். அவருக்கு என்ன அரசியல் தெரியும்? அரசியல் ஞானம் இருக்கின்றதா? கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுகிறார். இதிலிருந்து அவருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
பாரத பிரதமர் என்ன செய்தார் என்று கேட்கின்றார். சினிமா வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தான் காரணம். நடிகர் விஜய் தனி விமானத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அந்த அளவிற்கு விமான நிலையம் முன்னேற்றி இருக்கின்றது. நாடு முன்னேறி இருக்கின்றது. தூத்துக்குடி விமான நிலையத்தை எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் விஜய்யால் ஒரு மாநாட்டை ஒழுங்காக நடத்த முடிந்ததா? ஒரு கொடியை ஒழுங்காக நட முடிந்ததா?. எனவே இவர் சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை. அ.தி.மு.க. பாஜக கூட்டணி வெற்றி பெறும்.
இருமொழிக்கொள்கை வேண்டாம் என்று சொல்லவில்லை. அனைவரும் அதில் தான் படித்துக் கொண்டு வந்தோம். நாடு விரிவடையும்போது, தேசம் விரிவுபடும்போது உலக அரங்கில் நாடு முன்னேறும்போது 3 மொழி தேவைப்படுகிறது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிற்கு 3 மொழிகளில் டுவீட் செய்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தனியார் பள்ளியில் 2 மொழி தான் சொல்லிக் கொடுக்கின்றீர்களா? என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். தி.மு.க. கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளிகளில் 3மொழி உள்ளது. 3 மொழி படித்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகம் வளர்ந்து இருக்கிறது. அதில் அனைவரின் பங்கு இருக்கிறது.
தி.மு.க. காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழை பற்றி பேசும் தகுதி உங்களுக்கு உள்ளதா? தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.
- நாமும் பா.ஜ.க.வுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்.
- எதை பேசுகிறோம், யாரைப்பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று கவனத்துடன் பேச வேண்டும்.
மதுரையில் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு நேற்று நடந்தது. திரளான தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பேசும்போது, நாமும் பா.ஜ.க.வுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்?. அவர்களுடன் கூட்டணி வைக்க நம்ம என்ன மிகப்பெரிய ஊழல் கட்சியா?.
ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். இடம் அடிபணிந்து கொண்டும், இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணியாக நம் கூட்டணி இருக்காது என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் நெல்லையில் நடைபெற உள்ள பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை.
* எதை பேசுகிறோம், யாரைப்பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று கவனத்துடன் பேச வேண்டும் என்று விஜய்க்கு அறிவுரை கூறினார்.
- ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.
- சுவாமி சண்முகர் வள்ளி- தெய்வானையுடன் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.
8-ம் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
இன்று அதிகாலை சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 7.30 மணிக்கு சப்பரம் மேல் கோவில் வந்து சேரவேண்டும். ஆனால் இன்று காலதாமதமாக காலை 8.30 மணிக்கு சப்பரபவனி தொடங்கியது.
சுவாமி சண்முகர் வள்ளி- தெய்வானையுடன் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தொடர்ந்து 11.30 மணிக்கு மேல கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- சாமி சிலைக்கு நகை சாத்துவதில் சிவாச்சாரியார்கள் - திரிசுந்தரர்கள் இடையே ஏற்பட்ட மோதல்
- சப்பரத்தில் சாமி புறப்பாடு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் 6-ம் நாளான இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி சிலைக்கு நகை சாத்துவதில் சிவாச்சாரியார்கள் - திரிசுந்தரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், சப்பரத்தில் சாமி புறப்பாடு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
இதனால் சாமி புறப்பாட்டை பார்ப்பதற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே கோயில் நிர்வாகத்தினர் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
- திருச்செந்தூரில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
- தொடர் விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகும் விளங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று தற்போது மண்டல பூஜைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும் தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 7மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் வெயிலில் கைக்குழந்தையுடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் கடலில் குளிக்கும் போது அலை இழுத்துச் சென்று பாறைகளில் மோதி, 10 பேருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கவனமாக நீராட கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
- தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
- மத்திய பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளை தாக்கும் கருவியாக விசாரணை அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் அரசு விழாவில் பங்கேற்ற பின்பு தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. அரசு ஒரு புறம் தேர்தல் கமிஷனை தனது கையில் வைத்துக்கொண்டு அவர்கள் உதவியோடு பல தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் அவர்கள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து தாக்கக்கூடிய கருவிகளாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒன்றுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சோதனை. தி.மு.க. இதை எதிர்கொள்ளும். நமது அமைச்சர் எத்தனையோ சிக்கல்களை கடந்து தி.மு.க.வுடன் உறுதுணையோடு நிற்கக் கூடியவர். அதனால் எந்த பயமுறுத்தலாலும் தி.மு.க. தலைவர்களை அச்சுறுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொடர் விடுமுறை நாள் என்பதால் கோவில் வளாகம், கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.
- பக்தர்கள் வந்த வாகனங்களால் ஊருக்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகும் விளங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று தற்போது மண்டல பூஜைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும் தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 7மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் வெயிலில் கைக்குழந்தையுடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறை நாள் என்பதால் கோவில் வளாகம், கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது. பக்தர்கள் வந்த வாகனங்களால் ஊருக்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- 100-க்கும் மேற்பட்ட ஜப்பான் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர்.
- நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிலுக்குள் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்த சிறந்த பரிகார தலமாகாவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். திருவிழா காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று ஜப்பானிய ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில் முருகன் மற்றும் பழனி புலிப்பாணி ஆசிரமம் கவுதம் கார்த்திக் ஒருங்கிணைப்பில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குரு முனி மற்றும் அவர்களது சீடர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் கடந்த கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பழனி, ராமேஸ்வரம் உட்பட 128 கோவில்களுக்கு ஆன்மிக பயணமாக சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
மேலும் கோவிலுக்கு வெளியே வந்த ஜப்பான் நாட்டு முருக பக்தர்கள் ஒன்று கூடி தமிழில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா, ஞானவேல் முருகனுக்கு அரோகரா, கந்தவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க முருகனை வழிபட்டு சென்றனர்.
- தூத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.
- தூத்துக்குடி, நெல்லையில் முருங்கை ஏற்றுமதி புது மையம் ரூ.5.55 கோடியில் அமைக்கப்படும்.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தூத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.
* நெல்லையில் உணவு பதப்படுத்தும் மண்டலம் அமைக்கப்படும்.
* தூத்துக்குடி, நெல்லையில் முருங்கை ஏற்றுமதி புது மையம் ரூ.5.55 கோடியில் அமைக்கப்படும்.
* கப்பல் தொழில் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமான தளம் தூத்துக்குடியில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கான கட்டமைப்பை திராவிட மாடல் அரசு சிறப்பாக உருவாக்கி உள்ளது.
- சொன்னதை செய்வோம் என்பது தான் திமுக அரசின் குறிக்கோள்.
தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 41 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தென் தமிழ்நாடு பற்றி கலைஞர் கண்ட கனவை தற்போது நனவாக்கி வருகிறோம்.
* தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கான கட்டமைப்பை திராவிட மாடல் அரசு சிறப்பாக உருவாக்கி உள்ளது.
* முத்துநகரான தூத்துக்குடியில் 2-வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.
* தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்களுக்கு நுழைவு வாயில் தூத்துக்குடி.
* செமி கண்டக்டர், மின் வாகனம், பசுமை ஹட்ரஜன் உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது.
* வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவோம்.
* சொன்னதை செய்வோம் என்பது தான் திமுக அரசின் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வின்பாஸ்ட் நிறுவனம் தனது முதலீட்டிற்காக தமிழ்நாட்டை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன்.
- எளிமையாக தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதற்கு இதுவே சான்று.
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் ஆலையை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு வின்பாஸ்ட் அதிகாரிகளை வரவேற்கிறேன்.
* வின்பாஸ்ட் நிறுவனம் தனது முதலீட்டிற்காக தமிழ்நாட்டை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன்.
* இந்த பெருமையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பங்கு உண்டு.
* வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.
* இந்தியாவின் மொத்த மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 40%.
* மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
* வின்பாஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்ட 17 மாதங்களில் ஆலையில் உற்பத்தி தொடங்கி உள்ளது.
* எளிமையாக தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதற்கு இதுவே சான்று.
* இந்தியாவிலேயே தூத்துக்குடியில் தான் முழுமையான மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
* சென்னை, காஞ்சி, கோவை, ஓசூரை தொடர்ந்து மோட்டார் வாகன தொழிற்கூடமாக உருவெடுக்கும் தூத்துக்குடி.
* * ஹூண்டாய், நிசான் , டாடா, பிஎம்டபிள்யூ, ஓலா போன்ற நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியை தொடங்கின.
* கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பத்திலும் வின்பாஸ்ட் முதலீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






