என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் குறிப்பேடு வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

    மாநில துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு நிதி சார்ந்த தடையின்மை சான்று உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர்கள் கல்வி சான்றுகளுக்கு உண்மைத்தன்மை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள யூகேஜி மற்றும் எல்கேஜி வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் குறிப்பேடு வழங்க வேண்டும். பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தில் கூடுதல் விவரம் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆசிரியர்கள் மீது சுமத்த கூடாது.

    கூட்டத்தில் முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய வட்டாரங்களின் உறுப்பினர் சேர்க்கைகளை முடித்து பட்டியல், அடிக்கட்டு, தொகை ஆகியவைகளை வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

    கூட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்வாணன், செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை ஆகும்.
    • வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, தட்டாங்கோவிலில் உள்ள கோட்டூர்மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடை பெற்று வருகிறது. படிக்க விரும்பு பவர்கள் அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை, பெண்களுக்கு 14 முதல் உச்ச வயது வரம்பு இல்லை. 10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

    கோட்டூர் ஐ.டி.ஐ.யில் உள்ள தொழிற்பிரிவுகள் எலக்ட்ரீசியன், பிட்டர், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்-கண்டிசனிங் டெக்னீசியன், நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெல்டர். மேலும், டாடா டெக்னாலஜி 4.0 திட்டத்தின் கீழ் கோட்டூர் மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேசன் இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் மற்றும் அட்வான்ஸ் சி.என்.சி மிஷினிங் டெக்னீசியன் ஆகிய அதிநவீன தொழி ற்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த தொழிற்பிரிவுகளில் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம்.ஐ.டி.ஐ-ல் படிக்கும் காலத்தில் தகுதியுடைய மாணவ-மாணவிகளுக்கு சீருடை, மூடுகாலணி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், பஸ்பாஸ் மற்றும் பயிற்சிக்கு தேவை யான நுகர்பொருட்கள் முதலியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையும், படித்து முடித்த பின் வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். மேலும் விவரங்களுக்கு 80721 34721 மற்றும் 99523 53587 என்ற மொபைல் எண்ணிற்கு அல்லது நேரடியாக தொடர்பு கொ ண்டு ஐ.டி.ஐ படிப்பில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புவி வெப்பத்தை குறைக்க மரம் நடுவது அவசியம்.
    • தூய்மை பாரதம் இயக்கம் மூலம் நகரம் தூய்மையடைகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா இருவார விழாவின் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை வகித்து பேசும்போது, பொதுமக்களிடையே தூய்மை உறுதிமொழி ஏற்றல், திடக்கழிவு மேலாண்மை, இயற்கை முறையில் உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், நீர் மேலாண்மை,மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை குறைத்தல், நாப்கின்கள் பயன்ப டுத்துதல், கழிப்பறைகளின் பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. என்றார்.

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து பேசும்போது, தூய்மை பாரதம் இயக்கம் மூலம் நகரம் தூய்மையடைகிறது. மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பம் அதிகரித்து வருகிறது.

    இதனால் எதிர்காலத்தில் நாம் பேரிடரில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே மரங்களை நட்டு 33 சதவீத வனபரப்பை அதிகரித்து பூமியை குளிர்ச்சிபடுத்துவதால் மட்டுமே எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். ஒவ்வொருவரும் தன் கடமையாக கருதி மரக்கன்று நடுவதை இயக்கமாக கொண்டு செல்லவேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கு பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் சீதாலெட்சுமி, அலுவலர்கள் சிற்றரசு, நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், செந்தில்குமார் மற்றும் மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் திருலோகச்சந்தர், கனகதுர்கா, பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

    • தில்லைவிளாகம் ரெயில் நிலையம் அருகில் 30- க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
    • வேலைக்கு செல்வோருர்கள் பெரும் பொருளாதாரத்தை செலவு வேண்டி உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை செயற்குழு கூட்டம் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், தில்லைவிளாகம் இரயில் நிலையம் அருகாமையில் உதயமார்தாண்டபுரம், பின்னத்தூர், எடையூர் , தேவதானம், புத்தகரம் தோலி, தில்லைவிளாகம் இடும்பாவனம் என 8-க்கும் மேற்பட்ட ஊராட்சி மற்றும் 30- க்கும் மேற்பட்ட சிறு கிராமங்களும் அமைந்துள்ளது.

    வேலைக்கு செல்வோருக்கும் மேற்படிப்பிற்கு பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கும் விவசாயிகள் வியாபாரிகள் மருத்துவ தேவைக்கு பெருநகரங்களுக்கு செல்லவதற்கும் பேருந்து போக்குவரத்து பயன்படுத்துவதால் பெரும் பொருளாதாரத்தை செலவு வேண்டி உள்ளது.

    இதனால் தில்லைவிளாகம் மார்க்கம் வழியாக செல்லும் தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில் , செகேந்திரபாத் விரைவு இரயில் உள்பட இந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் தில்லைவிளாகம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன், மாவட்ட துனைதலைவர் அஸாருதீன், கிளை பொருளாளர் கமருதீன், அமிரக பொறுப்பாளர் மீரான் உசேன், பரக்கத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்.

    திருவாரூர்:  

    திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில்,காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கிடங்குகளில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். புதிய சுமை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

    கணினி மற்றும் துப்புரவு பணியாளர்களை உடன் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். நிரந்தர பணிகளில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், மாநில பொருளாளர் ஏழுமலை, மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மேலபனையூர் ஊராட்சி கமலாபுரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 2 மாதங்கள் ஆகியும், இதுவரை இந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் மனமுடைந்த விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை வயல்களுக்கு கொண்டு வந்து, அவற்றை நெற்பயிர்களை மேயவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் வேனுகோபால், சரவணன் ஆகியோர் கூறியதாவது,கமலாபுரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விளைநிலங்கள் அய்யனாற்றில் இருந்து பிரிந்து கூழையாறில் வரும் தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த கூழையாறு தூர்வாரப்படாததாலும் போதுமான அளவில் தண்ணீர் திறந்து விடாததாலும் கமலாபுரம் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

    மேலும், மதகுகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் கூழையாறில் இருந்து வரும் தண்ணீர் பொண்ணு கொண்டான் வடிகாலில் சென்று விடுகின்றன. எங்கள் பகுதி விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி பல ஆண்டுகளாக எட்டாக்கனியாகி உள்ளது.இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் எங்கள் கிராமத்திற்கு காலத்தோடு தண்ணீர் வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் குறுவை சாகுபடியை தொடங்கினோம்.

    ஆனால் தண்ணீர் இன்றி பயிர்களை மேயவிட்டு கால்நடைகளுக்கு உணவாக்கும் அவலநிலை ஏற்படும் என நினைத்து கூட பார்க்கவில்லை. இதுகுறித்து கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
    • அனைத்து மின் சாதனங்களையும் சோலார் சக்தியில் பயன்படுத்த முன்வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் நாம்கோ தொண்டு நிறுவனம், இந்திய அரசு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புதுடெல்லி ஜி.ஐ.இசர்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து திருத்துறை ப்பூண்டியில் சாலை ஓரங்களில் மின் இணைப்பு இன்றி தொழில் செய்யும் ஏழை வியாபாரிகளுக்கு சோலார் மின் சாதனம் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை தாங்கினார். மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம்கோ இயக்குனர் ஜீவானந்தம் சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து எடுத்து ரைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்து கொண்டு சாலையோர ஏழை வியாபாரி களுக்கு சோலார் மின் சாதனம் வழங்கி பேசுகையில்:-

    நாம் பயன்படுத்தும் அனைத்து மின் சாதனங்க ளையும் சோலார் சக்தியில் பயன்படுத்த முன்வர வேண்டும். நாம்கோ தொண்டு நிறுவனம் சோலார் விழிப்புணர்வு பணியை செய்து வருவது பாராட்டுக்குறியது என்றார்.

    இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் பயனாளிகள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நாம்கோ பணியாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

    • முருகன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே நேற்று தகராறு நடந்துள்ளது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம், பேரளம் அடுத்த மானந்தங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). விவசாய கூலி தொழிலாளி.

    இவரது மனைவி ஜெயந்தி.

    இந்நிலையில், முருகன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே நேற்று தகராறு நடந்துள்ளது.

    இதை பார்த்த எதிர்வீட்டை சேர்ந்த ராமையன் (50) என்பவர் முருகனை சமாதானம் செய்துள்ளார்.

    அப்போது முருகன், ராமையனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ராமையன் மற்றும் அவரது மகன்கள் சாந்தகுமார் (38), சசிகுமார் (40) ஆகியோர் சேர்ந்து முருகனை கட்டையால் தாக்கியுள்ளனர்.

    இதில் முருகன் மயக்கம் அடைந்துள்ளார்.

    உடனடியாக அவரை திருவாரூர் அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனும தித்தனர்.

    சிகிச்சை பெற்று வந்த முருகன் பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து, முருகனின் மனைவி ஜெயந்தி பேரளம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முருகனை தாக்கிய ராமையன், சாந்தகுமார், சசிகுமார் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வலங்கைமான் பேரூராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் பேரூராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரூராட்சியில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் கந்தசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் அனிபா, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ராதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், சி.பி.எம். நகர செயலாளர் முரளி, வெகுஐன அமைப்பின் நிர்வாகிகள் கலியபெருமாள், சண்முகம், இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    • பேரளம் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • சூர்யா வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாா்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த பேரளம் அருகே உள்ள வடுகக்குடி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்.

    இவருடைய மகள் சூர்யா (வயது20). இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாா்.

    இதனால் மனமுடைந்த சூர்யா வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தாள்.

    இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமுதா பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து பேசினார்.
    • சமூக நல அலுவலர் கார்த்திகா பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றி கூறினார்.

    திருவாரூர்:

    மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில், முன்னாள் முதல்- அமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான சமூக நலத் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தொழில் கூட்டுறவு அலுவலர் சேதுராமன் முன்னிலை வகித்தார்.

    திருவாரூர் மாவட்ட தொழில் கூட்டுறவு அலுவலர் கவுதமன் வரவேற்றார். ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி சுமிதா திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசினார்.

    பாதுகாப்பு அலுவலர் அமுதா பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து பேசினார்.

    மன்னார்குடி தலைமை ஆஸ்பத்திரி மனநல பிரிவு டாக்டர் புவனேஸ்வரி மன அழுத்தம் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும் அரசு ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் சிறப்பு மனநல சிகிச்சை குறித்தும் பேசினார்.

    மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் புதுமைப்பெண் திட்டம் குறித்தும் பேசினார்.

    • மன்னார்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • நுண்ணுயிர் உரமானது மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமை ச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா இருவார விழாவின் ஒரு பகுதியாக திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னார்குடியில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் தலைமை தாங்கினார்.

    மன்னார்குடி நகர்மன்ற உறுப்பினர் திருச்செல்வி அமிர்தராஜ் முன்னிலை வகித்தார்.

    சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை மற்றும் நுண்ணுயிர் உரம் தயாரித்தல் குறித்து விளக்கி பேசுகையில்:-

    மன்னார்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதிலிருந்து பெறப்படும் நுண்ணுயிர் உரமானது பொது மக்கள் பயன்பாட்டிற்கு மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் அலுவலர்கள் திருலோ கச்சந்தர், கனகதுர்கா, பயிற்றுனர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×