என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • மாணவ -மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
    • தாய்ப்பாலும் அதன் தனித்தன்மையும் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரத் தினத்தை முன்னிட்டு தாய்ப்பாலும் அதன் தனித்தன்மையும் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழிப்புணர்வை இன்னர்வீல் சங்கம் திருவாரூர் (கிளை) அதிகாரிகள் நேதாஜி கல்லூரியுடன் இணைந்து , கல்லூரியின் முதல்வர் சிவகுநாதன் வரவேற்புரை வழங்கினார். தாய்ப்பாலும் அதன் தன்மையையும் பற்றியும் கல்லூரி இயக்குனர் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியின் தாளாளர் விஜய சுந்தரம் சிறப்புரையாற்றி னார்.

    இன்னர்வீல் சங்கம் அதிகாரிகள் மாலதி செல்வம், செயலாளர் சக்தி கண்ணு ஜோதி, பொருளாளர் சூரியகலா சந்திரசேகர், துணைத்தலைவி பவானி பாண்டியன், முன்னாள் தலைவிகள் விஜயகுமாரி விவேகானந்தன், சிவசங்கரி அகிலன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெயக்குமாரி கலந்து கொண்டு தாய்பாலின் மகத்துவம் குறித்து பேசினார்.

    மாணவ -மாணவி களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . இதில் கல்வி குழும தாளாளர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அலுவலர் நிர்மலா ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
    • கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவிந்தகுடி கம்மாள தெருவை சேர்ந்தவர் மணி.

    இவரது வினோத் (வயது 33).

    இவர், உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

    அவர் பணிபுரிந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தபால் அலுவலக மேலதிகாரிகள் அஞ்சலக கணக்கு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    அதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

    கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் மணி புகார் கொடுத்தார்.

    அதில், எனது மகன் வினோத், அஞ்சலக கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    ேமலும் அதிகாரிகள் மூன்று தவணைகளாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை வாங்கி சென்று விட்டனர்.

    மேலும் அவர்கள் எனது வீட்டில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் எடுத்து சென்றுவிட்டனர்.

    இது தவிர எனது மகன் உடையாளூரை சேர்ந்த 2 பேரிடம் ரூ.14 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளதாக அவர்களும் வட்டியுடன் பணத்தை தருமாறு கேட்டு மிரட்டுவதாக எனது குடும்பத்தினரிடம் வினோத் தெரிவித்துள்ளார்.

    தபால் அதிகாரிகள் எனது மகனை அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

    இதனால் மனமுடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து வி்ட்டார்.

    எனவே எனது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
    • சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் தாய்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் கலந்துகொண்டு தாய்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்.

    இதில் மருத்துவ அலுவலர் அனுசியா, உதவி சித்தம ருத்துவ அலுவலர் அஞ்சுளா தேவி, பல்மருத்துவஅலுவலர் சர்மிளா மற்றும் செவிலி யர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த வயதில் உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு விதமான எண்ணங்க ளாலும், சிந்தனைகளாலும் மாற்றங்கள் ஏற்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியை தமிழ்ச்செல்வி வரவேற்றார்.

    வட்டார வளமைய சிறப்பு பயிற்றுநர் ராஜலட்சுமி பேசுகையில், பதின் வயது என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது.

    இந்த வயதில் உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு விதமான எண்ணங்க ளாலும், சிந்தனைகளாலும் மாற்றங்கள் ஏற்படும்.

    இந்த மாற்றங்கள் ஏற்படும் பொழுது குடும்ப சூழல் சமுதாய பழக்கங்கள் நிறைந்த பகுதியில் உள்ளவர்கள் நல்ல நட்பு வட்டத்தின் காரணமாக உரிய வழிகாட்டுதலோடு இப்பருவத்தை எளிதில் கடந்து விடுகின்றனர்.

    பலர் சமூக ஊடகங்களின் தாக்கத்தினாலும் தவறான நட்பு, திரைப்படங்களின் பாதிப்பு, கலாச்சாரம் போன்ற போலியான பிம்பங்கள் மூலமாக தடுமாற்றத்தை சந்திக்கின்றனர்.

    இந்த நிலை மாற்றுவதற்கு இப்பருவத்தில் சற்று தடுமாறினாலும் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகிவிடும்.

    பெற்றோர்கள் ஆரோக்கியமான உணவு முறைகள் கட்டுப்பாடான உடை, அலங்காரங்கள் மனநலம் மற்றும் உடல் நலம் சார்ந்த கருத்துக்கள் ஆகியவற்றை தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து ரைக்க வேண்டும். என்றார்.

    முடிவில் ஆசிரியை அஜிதா கனி நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஆடின் மெடோனா, உமா மகேஸ்வரி செய்திருந்தனர்.

    • நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனத்தில் மறைக்கா கோரையாறு உள்ளது.

    மேலபெருமழை, பள்ளிமேடு, தில்லைவிளாகம், தொண்டியக்காடு, இடும்பாவனம் போன்ற பகுதிகளில் உள்ள சாகுபடி நிலங்களுக்கு இந்த ஆற்றின் மூலம் தான் தண்ணீர் செல்கிறது.

    கடைமடை பகுதிகளான இப்பகுதியில் நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது இந்த ஆற்றில் தண்ணீர் செல்லமுடியாதவாறு ஆகாயதாமரைகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளது.

    இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தண்ணீர் திறப்பதற்கு முன்பே ஆற்ைற ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அகற்றவில்லை.

    தற்போது ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடும்பாவனம் மறைக்கா கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சமத்துவபுரம் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கல்லிக்குடி ஊராட்சியில் பலியபுரம் பகுதி, மேல தெருவில் பிளெவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், கன்னூர் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி தடுப்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருவதையும், கல்லிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்காக கட்டப்ப ட்டுவரும் கழிவறை மற்றும் நியாயவிலைக்கடை கட்டடத்தினையும், ஓடாச்சேரி ஊராட்சியில் மங்களநா யகிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும், மங்களநாயகிபுரம் நூலகத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளையும், கட்டப்பட்டுவரும் நியாயவி லைக்கடையினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஓடாச்சேரி சமத்துவபுரத்திலு பெரியார் சிலை சீரமைப்பு பணி, நுழைவாயில், சமத்துவபுரம் குடிநீர் குழாய் விரிவாக்கம் பணிகள் மற்றும் சமத்துவபுரம் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவ தையும் கலெக்டர் பார்வையிட்டார். ஆமுர், திருவாதி ரைமங்கலம், சோழங்கநல்லூர் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தோல் பராமரிப்பிற்கு ஆவாரை ஆகியவற்றை நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்
    • பெண்களுக்கான தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளை மருத்துவ குழுவினர் வழங்கினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வளரிளம் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமின் தொடக்கத்தில் அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவ அலுவலர் வசந்தகுமார் குடற்புழு வினால் ஏற்படும் நிலை குலைவு பற்றியும், உடலுக்குள் செல்கின்ற நோய் கிருமிகள் பற்றியும் விளக்கம் அளித்தார்.

    எலும்புகள் பலம்பெற பிரண்டை, சுவாசக் கோளாறு நீங்க தூதுவளை, தோல் பராமரிப்பிற்கு ஆவாரை ஆகியவற்றை நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    சித்த மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, வளர் இளம் பெண்களுக்கான உணவு முறைகள் பற்றியும், சிவப்பு அரிசி புட்டு, உளுத்தங்களி, திணை, எள்ளு, சுண்டைவற்றல், வெந்தயம், வெண்பூசணி, அத்திப்பழம், கருவேப்பிலை நெல்லிக்காய் போன்றவற்றை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    எண்ணையில் பொரித்த பண்டங்களை தவிர்ப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.

    மாணவர், பெண்க ளுக்கான தனிப்பட்ட ஆலோ சனைகள் மற்றும் பரிசோ தனைகளை மருத்துவ குழுவினர் வழங்கினர்.

    ஹார்மோன்கள் சுரப்பு பற்றிய தெளிவை பெண்கள் அறிந்திருக்க வேண்டும் என்று மருந்தாளுநர் ராணி, ஆரோக்கியமான மனநிலை பற்றி யோகா பயிற்றுநர் சுமதி, உடற்பயிற்சிகளின் தேவைகள் பற்றி யோகா பயிற்றுநர் சக்திவேல் ஆகியோர் விளக்கி கூறினர்.

    முகாமை தலைமை ஆசிரியர் சுதர்சனன் தொடங்கி வைத்தார்.

    முடிவில் பள்ளி நுகர்வோர் மன்ற ஒருங்கி ணைப்பாளர் தமிழாசிரியர் தமிழ்க் காவலன் நன்றி கூறினார்.

    • மன்னார்குடியில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணியினர்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
    • அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் கண்டன உரையாற்றினார்.

    மன்னார்குடி:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணியினர்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அ.ம.மு.க.வினரும் கலந்து கொண்டனர்.

    ஒ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

    நகரச் செயலாளர் லெட்சுமணன் வரவேற்று பேசினார்.

    அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் கண்டன உரையாற்றினார்.

    இதில் அ.ம.மு.க. நகர செயலாளர் ஆனந்தராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறையினர் இப்பாலத்தில் பராமரிப்பு பணிகளை செய்து பராமரித்து வருகின்றனர்.
    • ஒரு வழி பாதையாக மாற்றி இருப்பதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் புறவழிச் சாலையில் ரயில் நிலையத்திற்கு அருகில் மேம்பாலம் உள்ளது.

    இந்த மேம்பாலத்தின் வழியாக திருவாரூர், தஞ்சாவூர், நாகப்ப ட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. முக்கிய மான ஊர்களுக்கு செல்ல வேண்டிய மேம்பாலமாக உள்ளதால் இதில் ஏராளமான கனரக வாகனங்களும், பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகின்றன.

    இந்த பாலம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. அவ்வப்போது நெடுஞ்சா லைத்துறையினர் இப்பா லத்தில் பராமரிப்பு பணிகளை செய்து பராமரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மாலை இந்த பாலத்தில் திடீரென ஒரு அடி வட்டத்தில் குழி ஏற்பட்டது.

    மேலும் அந்த குழியை சுற்றி இரண்டு அடி தூரத்திற்கு பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக வாகனங்கள் செல்வதும் வருவதும் என உள்ளது. ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து உள்ள பாலம் என்ற நிலையில், ஒரு வழி பாதையாக மாற்றி இருப்பதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் பொது மக்கள் , வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதனை போக்குவரத்து போலீசார் சரி செய்து வருகின்றனர்.

    -உடனடியாக இந்த பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவாரூர் நகராட்சியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும்.
    • வார்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் புவனப் பிரியா செந்தில் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பருவமழை தொடங்க இருப்பதால், அனைத்து வார்டுகளிலும் பாரபட்சம் இன்றி மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    மேலும் நகராட்சி முழுவதும் உள்ள வார்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைத்து தர வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர் மன்ற உறுப்பினர்கள் பேசினர்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியும் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை. நகர்மன்ற உறுப்பினர் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லாமல் இருக்கிறது.

    உடன் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அனைவரின் புகைப்படங்களும் சேகரித்து ஒரு வார காலத்திற்குள் அடையாள அட்டை வழங்கு வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் நகராட்சி மேலாளர் முத்துக்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், சங்கர், செந்தில், ரஜினி சின்னா, அசோகன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும்.
    • வருகிற 10-ந் தேதிக்குள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2½லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

    https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும்.

    9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

    தேசிய தேர்வு முகமை நடத்தும் மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான நுழைவு தேர்வில் பெற்ற தகுதியுடன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    இத்தேர்விற்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பித்தலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

    எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைபேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இத்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்கள் https://yet.nta.ac.in மற்றும் https://socialjustice.gov.in/schemes/ Mfpa ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி முதல் மந்திரியுடன் சகோதரியாக இணைந்து பணியாற்றுகிறேன்.
    • அனைவரும் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் நடைபெற்ற ஒரு சமுக சேவை விருது வழங்கும் விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது,

    தஞ்சை மண் மிகுந்த சிறப்புக்குரியது. நான் வாழ்க்கை பாடத்தை தஞ்சையில் தான் கற்றுக் கொண்டேன். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள் மிகுந்த அன்பு செலுத்துபவர்கள். அவர்களைப் பார்த்துதான் எனக்கு பொது வாழ்வின் மீது பற்றுதல் ஏற்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    புதுவையிலும் அன்போடு மக்கள் பழகி வருகிறார்கள். பலர் நான் ஆளுநராக இருந்து அரசியல் செய்வதாக சொல்லுகிறார்கள். அதே நேரத்தில் புதுவை முதல்வர் என்னிடம் சகோதர உணர்வோடு பழகி வருகிறார். புதுச்சேரியில் முதல்வருக்கு, நான் சகோதரியாக இருந்து ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறோம்.

    தெலுங்கானாவில் முதல்வர் என்னை எதிரியாக பார்க்கிறார். அனைவரும் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும். உழைப்பு இருந்தால் எவரும் முன்னுக்கு வரலாம். அதே நேரத்தில் ஏழைகளுக்கும் சேவை செய்ய வேண்டும். ஏழைகளுக்கு சேவை இறைவனுக்கு செய்யும் சேவை.

    இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக மாவட்டச் செயலாளர் இரா.காமராஜ் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×