search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Solanum Trilobatum"

    • தோல் பராமரிப்பிற்கு ஆவாரை ஆகியவற்றை நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்
    • பெண்களுக்கான தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளை மருத்துவ குழுவினர் வழங்கினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வளரிளம் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமின் தொடக்கத்தில் அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவ அலுவலர் வசந்தகுமார் குடற்புழு வினால் ஏற்படும் நிலை குலைவு பற்றியும், உடலுக்குள் செல்கின்ற நோய் கிருமிகள் பற்றியும் விளக்கம் அளித்தார்.

    எலும்புகள் பலம்பெற பிரண்டை, சுவாசக் கோளாறு நீங்க தூதுவளை, தோல் பராமரிப்பிற்கு ஆவாரை ஆகியவற்றை நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    சித்த மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, வளர் இளம் பெண்களுக்கான உணவு முறைகள் பற்றியும், சிவப்பு அரிசி புட்டு, உளுத்தங்களி, திணை, எள்ளு, சுண்டைவற்றல், வெந்தயம், வெண்பூசணி, அத்திப்பழம், கருவேப்பிலை நெல்லிக்காய் போன்றவற்றை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    எண்ணையில் பொரித்த பண்டங்களை தவிர்ப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.

    மாணவர், பெண்க ளுக்கான தனிப்பட்ட ஆலோ சனைகள் மற்றும் பரிசோ தனைகளை மருத்துவ குழுவினர் வழங்கினர்.

    ஹார்மோன்கள் சுரப்பு பற்றிய தெளிவை பெண்கள் அறிந்திருக்க வேண்டும் என்று மருந்தாளுநர் ராணி, ஆரோக்கியமான மனநிலை பற்றி யோகா பயிற்றுநர் சுமதி, உடற்பயிற்சிகளின் தேவைகள் பற்றி யோகா பயிற்றுநர் சக்திவேல் ஆகியோர் விளக்கி கூறினர்.

    முகாமை தலைமை ஆசிரியர் சுதர்சனன் தொடங்கி வைத்தார்.

    முடிவில் பள்ளி நுகர்வோர் மன்ற ஒருங்கி ணைப்பாளர் தமிழாசிரியர் தமிழ்க் காவலன் நன்றி கூறினார்.

    ×