என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு வலைவீச்சு
  X

  இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்த சூர்யா மற்றும் சிந்துவை தனிமையில் சந்தித்து ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
  • பஞ்சாயத்தாரிடம் சிந்துவை திருமணம் செய்து கொள்வதாக ஒத்துக்கொண்ட சூர்யா பின்னர் நாட்களை கடத்த தொடங்கினார்.

  நன்னிலம்:

  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள மகிழஞ்சேரி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் சூர்யா (வயது 22). இவர் அப்பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகள் சிந்து (வயது 20) என்பவரை கடந்த 2 வருடங்களாக காதலித்து உள்ளார்.

  இந்நிலையில் வெளி நாட்டிற்குச் சென்ற சூர்யா வீடியோ கால் மூலம் சிந்துவிடம் ஆசை வார்த்தைகள் கூறி தினமும் பேசியுள்ளார். அப்போது, நான் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். மேலும்வெளிநாட்டில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்த சூர்யா மற்றும் சிந்துவை தனிமையில் சந்தித்து ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

  இந்நிலையில் சிந்து, சூர்யாவிடம் தன்னை சீக்கிரமாக திருமணம் செய்து கொள் என வலியுறுத்தி உள்ளார். ஆனால் சூர்யா, மறுத்துள்ளார். இதையறிந்த சிந்துவின் குடும்பத்தினர் ஊர் பஞ்சாயத்தில் கூறி இதுபற்றி பேசினர். அப்போது பஞ்சாயத்தாரிடம் சிந்துவை திருமணம் செய்து கொள்வதாக ஒத்துக்கொண்ட சூர்யா பின்னர் நாட்களை கடத்த தொடங்கினார். இதில் ஆத்திரமடைந்த சிந்து, சூர்யாவின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்துகொள்ள கூறியுள்ளார். அப்போது சூர்யாவின் பெற்றோர் குமார் மற்றும் கீர்த்திகா ஆகியோர் சிந்துவை மிரட்டி வெளியேற்றி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

  இதனால் சிந்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் சூர்யாவின் பெற்றோர் குமார், கீர்த்திகா மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் சூர்யாவை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×