search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் தீக்குளிக்க முயற்சி
    X

    தீ குளிக்க முயன்ற சசிகலாவை மீட்டு போலீசார் விசாரித்தனர்.

    பெண் தீக்குளிக்க முயற்சி

    • திடீரென அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • மன வேதனை அடைந்த என் கணவர் உடல் நலிவுற்று ஆம்புலன்ஸ் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது ஒரத்தநாடு அடுத்த பருத்தியப்பர் கோவிலை சேர்ந்த சக்திவேல் மனைவி சசிகலா என்பவர் கலெக்டர் அலுவலகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    திடீரென அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் எடுத்து உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அதிர்ச்சியடைந்த போலீசார் ஓடி வந்து அவரிடம் இருந்து கேனை பறித்து வீசினர். உடல் மீது தண்ணீர் ஊற்றினர்.

    இது குறித்து சசிகலாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதற்கு சசிகலா கூறும்போது, எனது கணவர் கடந்த 2017 ஆம் ஆண்டு செங்கிப்பட்டி சேர்ந்த ஒருவருடன் நெல் வியாபாரம் செய்து வந்தார்.

    என் கணவருடன் வேலை பார்த்த அந்த நபர் எங்களுக்கு வரவேண்டிய ரூ.18 லட்சத்தை இதுவரை எங்களுக்கு தரவில்லை.

    என் கணவர் பலமுறை அவரிடம் கேட்டுப் பார்த்தும் பலன் இல்லை.

    இதனால் மன வேதனை அடைந்த என் கணவர் உடல் நலிவுற்று ஆம்புலன்ஸ் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

    அதன் பின்னர் சில நாட்களில் என் கணவர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.

    தற்போது எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது.

    கடன் தொல்லையும் அதிகரித்து விட்டது.

    எனவே மன வேதனையில் தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×