என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அன்னூரில் இளம்பெண்ணை காரில் கடத்தி திருமணம் செய்ய முயற்சி- வாலிபர்கள் கைது
  X

  அன்னூரில் இளம்பெண்ணை காரில் கடத்தி திருமணம் செய்ய முயற்சி- வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்பெண்ணை கட்டாய திருமணம் செய்ய முயன்ற சண்முகசுந்தரத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
  • விசாரணையில் அவருக்கு உதவியாக கெம்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்(43) என்பவரும் இருந்தது தெரியவந்தது.

  கோவை:

  கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கரியாம்பாளையம் மசக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண்.

  இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (38). சண்முகசுந்தரம் அந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு அவர் தனது காதலை அந்த இளம்பெண்ணிடம் கூறியுள்ளார்.

  அதற்கு அந்த இளம்பெண் விருப்பமிருந்தால் தனது பெற்றோரிடம் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவர் அந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் இளம்பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

  இந்த நிலையில் சண்முகசுந்தரம் தான் திருமணம் செய்து கொண்டால் அந்த இளம்பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன் இல்லை என்றால் இறந்துவிடுவேன் என கூறி வந்துள்ளார்.

  நேற்று அந்த இளம்பெண் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சண்முகசுந்தரம் தனது காரில் வழிமறித்து தனக்கு ஒரு முடிவு சொல்லுமாறு மிரட்டி உள்ளார். அதற்கு அந்த இளம்பெண் பேச மறுத்து அங்கிருந்து செல்ல முயற்சி செய்தார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகசுந்தரம் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக தனது காரில் ஏற்றி பொன்னேகவுண்டன் புதூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரிடம் இருந்து தப்பி அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  பின்னர் இளம்பெண்ணை கட்டாய திருமணம் செய்ய முயன்ற சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கு உதவியாக கெம்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்(43) என்பவரும் இருந்தது தெரியவந்தது.

  அவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜயகுமார் உதவியதும், இவர்கள் 2 பேரும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×