search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரவள்ளூரில் பணம் முதலீடு செய்வதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.44 லட்சம் மோசடி- இளம்பெண் கைது
    X

    பெரவள்ளூரில் பணம் முதலீடு செய்வதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.44 லட்சம் மோசடி- இளம்பெண் கைது

    • பிரபல தனியார் நிறுவனத்தில் பணமுதலீடு செய்து வந்தார்.
    • இந்துமதி நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    கொளத்தூர்:

    சென்னை, பெரவள்ளூர், எஸ். ஆர். பி காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெரி மெசாக். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் பணமுதலீடு செய்து வந்தார். இவருக்கு அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த அனகாபுத்தூரைச் சேர்ந்த இந்துமதி (31) என்பவர் பணமுதலீடு சம்பந்தமாக உதவி செய்து வந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே வேலையை விட்டு நின்ற இந்துமதி தொடர்ந்து வீட்டில் இருந்தபடி பணமுதலீடு சம்பந்தமாக ஆலோசனை வழங்கி உதவி செய்து வருவதாக ஜெர்ரி மெசாக்கிடம் கூறினார். மேலும் அவரிடம் சிறுக சிறுக முதலீடு செய்ய பணத்தையும் வாங்கினார். ஜெர்ரி மெசாக் தனது மனைவி மற்றும் மகளின் பெயரில் ரூ.72 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி இருந்தார். இதற்கான ரசீது மற்றும் மெயில் சம்பந்தமான பதிவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து அனுப்புவதாக இந்துமதி அனுப்பி வைத்து உள்ளார்.

    இதற்கிடையே ஜெர்ரி மெசாக் தனது முதலீடு பணத்தை சரி பார்த்தபோது அதில் ரூ.44 லட்சம் தனது கணக்கில் இல்லை என்பது தெரிந்தது. இந்துமதி நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெர்ரி மெசாக், பெரவள்ளுர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்துமதியை கைது செய்தனர்.

    Next Story
    ×