search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சைதாப்பேட்டை தொகுதியை பசுமை சைதையாக மாற்றியவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்- உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
    X

    சைதாப்பேட்டை தொகுதியை பசுமை சைதையாக மாற்றியவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்- உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

    • ஒரு லட்சமாவது மரக்கன்று நடும் நிகழ்ச்சி சைதாப்பேட்டை சின்னமலையில் நேற்று மாலையில் நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒரு லட்சமாவது மரக்கன்றை நட்டார்.
    • இந்த நிகழ்ச்சிக்காக ஆலமரத்தின் அடியில் இருக்கை அமைத்து வித்தியாசமான முறையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    சைதாப்பேட்டை தொகுதியை பசுமை சைதையாக மாற்றும் திட்டத்தை மா.சுப்பிரமணியன் கடந்த 2015 ஜூலை 1-ந் தேதி தொடங்கினார். மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின்படி ஒரு லட்சம் மரக்கன்றுகளை சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் நடுவதற்கு முடிவு செய்தனர். இதற்காக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள மரக்கன்றுகள் விற்பனை செய்யும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

    வேம்பு, பூவரசு, அரசு, ஆலமரம், நாவல் மரம், அத்தி மரம், புங்க மரம், பாதாம் மரம் ஆகிய நீண்ட நாள் நிலைத்து நிற்கும் மரங்களை மட்டுமே இந்த திட்டத்தின்படி வாங்கி தொகுதி முழுவதும் நட்டு வந்தனர். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக நடமாடும் வாகனம் ஒன்று தயார் செய்யப்பட்டது. இந்த வாகனத்தில் மரக்கன்றுகளுடன் தொகுதி முழுவதும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இதில் 3 பணியாளர்கள் இருப்பார்கள்.

    தொகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் பிறந்த நாளின் போது மரம் நட தொலைபேசியில் தொடர்பு கொண்டால் போதும் அவர்கள் கேட்கும் மரக்கன்றை வீட்டில் நேரடியாக கொண்டு கொடுப்பார்கள். வீட்டின் முன்பு மரத்தை நட்டு வேலியும் அமைத்துக் கொடுக்கப்படும்.

    ஒரு வருடம் அந்த மரத்தை முறையாக பராமரித்தால் பசுமைக் காவலர் விருது பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு வழங்கப்படும். இப்படி தொகுதி முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 40 ஆயிரம் மரங்கள் வர்தா புயலின் போது சாய்ந்தது. ஏராளமான மரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. அதையும் சேர்த்து ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    ஒரு லட்சமாவது மரக்கன்று நடும் நிகழ்ச்சி சைதாப்பேட்டை சின்னமலையில் நேற்று மாலையில் நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒரு லட்சமாவது மரக்கன்றை நட்டார். இந்த நிகழ்ச்சிக்காக ஆலமரத்தின் அடியில் இருக்கை அமைத்து வித்தியாசமான முறையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    அமைச்சர் மா. சுப்ரமணியன் எந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாலும் அது வித்தியாசமான முறையில் இருக்கும். இந்த மரக்கன்று நடும் திட்டத்தையும் ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து செயல்படுத்தி வருவது அவரால் மட்டுமே முடியும். அவர் கூறும்போது, "இதை தொடங்கி வைத்த முதல்-அமைச்சரின் கைராசி" என்று குறிப்பிட்டார்.

    ஆனால் கைராசி என்பது தலைவருக்கு பிடிக்காது. அவர் நம்புவது உழைப்பை மட்டும் தான். நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது கொரோனா தாக்கம் எப்படி இருந்தது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்த நெருக்கடியான நேரத்தில் அந்தப் பொறுப்பை தலைவர் மா. சுப்பிரமணியனிடம் வழங்கினார். அவரும் தலைவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மிகச் சிறப்பாக பணியாற்றி கொரோனாவை ஒழிப்பதில் வெற்றிகண்டார்.

    12 கோடி பேர் தடுப்பு ஊசி செலுத்தியதற்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் காரணம். இன்று பாதிபேர் முக கவசம் அணியாமல் தைரியமாக வெளியே சுற்றுவதற்கு காரணமும் அவர்தான்.

    அவர் எந்தப் பணியை கையில் எடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பார் என்பது தலைவருக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பசுமை சைதை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், எம்.எல்.ஏ.க்கள் பிரபாகர்ராஜா, தாயகம் கவி, அரவிந்த்ரமேஷ், துணை மேயர் மகேஷ் குமார், மண்டல தலைவர் தனசேகரன், மாவட்ட பிரதிநிதியும், பசுமை சைதை ஒருங்கிணைப்பாளருமான பொன்.ஜெய்சிங், பொறியாளர் அணி பகுதி அன்பாளரும், பசுமை சைதை பகுதி ஒருங்கி ணைப்பாளருமான ஆர்.எஸ்.ரமேஷ், கிருஷ்ணகுமார், பாரதி பாஸ்கர், அபய்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×