என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாரதிய ஜனதா நிர்வாகியின் கடையை சூறையாடிய கும்பல்- தடுக்க முயன்ற ஊழியர்கள் மீது தாக்குதல்
  X
  கடை சூறையாடப்பட்டு பொருட்கள் உடைந்து கிடக்கும் காட்சி.

  பாரதிய ஜனதா நிர்வாகியின் கடையை சூறையாடிய கும்பல்- தடுக்க முயன்ற ஊழியர்கள் மீது தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு வேல்கண்ணன் சார்பில் அப்பகுதியில் ஒட்டியிருந்த போஸ்டர்கள் மீது அதேபகுதியை சேர்ந்த தி.மு.க.வினர் சிலர் போஸ்டர்கள் ஒட்டியதாக கூறப்படுகிறது.
  • போஸ்டர் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் கே.டி.சி. நகர் அருகே உள்ள உத்தமபாண்டியன்குளம் பகுதியை சேர்ந்தவர் வேல்கண்ணன்(வயது 39).

  இவர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். இவர் பாளை அரியகுளம் பகுதியில் டீக்கடை உள்பட 4 கடைகள் நடத்தி வருகிறார்.

  இவரது கடையில் அரியகுளத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன்(42), பாரத்(23), செல்வம்(25) ஆகிய 3 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு வேல்கண்ணன் சார்பில் அப்பகுதியில் ஒட்டியிருந்த போஸ்டர்கள் மீது அதேபகுதியை சேர்ந்த தி.மு.க.வினர் சிலர் போஸ்டர்கள் ஒட்டியதாக கூறப்படுகிறது.

  இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

  இந்நிலையில் நேற்று இரவு முகமூடி அணிந்த வந்த ஒரு கும்பல் வேல்கண்ணனின் கடைகளை அடித்து உடைத்து சூறையாடி உள்ளது. இதனை தடுக்க முயன்ற கடை ஊழியர்களான சிவசுப்பிரமணியன், பாரத், செல்வம் ஆகியோரையும் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

  இதையறிந்த வேல்கண்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் நிர்வாகிகள் கடைக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்த ஊழியர்களை பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இதுபற்றிய தகவலறிந்து பாளை தாலுகா போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கடையை சூறையாடி ஊழியர்களை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர் கூறினார்.

  இந்நிலையில் கடையை சூறையாடியதாக அதேபகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் மகன்கள் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதற்கிடையே, கடையை சூறையாடிய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என பா.ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை சந்தித்து மனு கொடுத்தனர்.

  Next Story
  ×