என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தி.மு.க. உள்கட்சி தேர்தல்- தாம்பரம் மாநகர செயலாளர் பதவிக்கு நாளை வேட்பு மனு தாக்கல்
  X

  தி.மு.க. உள்கட்சி தேர்தல்- தாம்பரம் மாநகர செயலாளர் பதவிக்கு நாளை வேட்பு மனு தாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாம்பரம் மாநகர செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள கே.எம்.எஸ். திருமண மண்டபத்தில் வேட்பு மனு பெறப்படுகிறது.
  • மனுக்களை மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  சென்னை:

  தி.மு.க. உள்கட்சி தேர்தல் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது 16 மாநகராட்சிகளில் உள்ள மாநகர செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திண்டுக்கல், கும்பகோணம், கரூர், சேலம், ஓசூர், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, ஈரோடு, சிவகாசி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்சி ஆகிய ஊர்களில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

  திருநெல்வேலி, தஞ்சாவூருக்கு தேர்தல் தேதி பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதில் தாம்பரம் மாநகர செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நாளை (9-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள கே.எம்.எஸ். திருமண மண்டபத்தில் வேட்பு மனு பெறப்படுகிறது.

  இதற்கான மனுக்களை மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  Next Story
  ×