search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புறம்போக்கு நிலத்தில் உள்ள 20 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்க முடிவு
    X

    புறம்போக்கு நிலத்தில் உள்ள 20 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்க முடிவு

    • சென்னை நகரம் முழுவதும் பல இடங்களில் புறம்போக்கு இடத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருபவர்கள் பட்டா கேட்டும், சொத்து வரி விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
    • அம்பத்தூர் மண்டலம் பாடி, காமராஜர் நகர் போன்ற பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் பல்வேறு மண்டலங்களில் கிராம நத்தம் போன்ற நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் பல குடும்பங்கள் பட்டா பெற இயலவில்லை என்றும் புறம்போக்கு நிலங்களில் உள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அம்பத்தூர் மண்டலம் பாடி, காமராஜர் நகர் போன்ற பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதியில் குடியிருப்பவர்கள் பட்டா கேட்டு வருகின்றனர். சொத்துவரி விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் சென்னை நகரம் முழுவதும் பல இடங்களில் புறம்போக்கு இடத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருபவர்கள் பட்டா கேட்டும், சொத்து வரி விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து சென்னை நகரில் புறம்போக்கு நிலத்தில் உள்ள 20 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- முந்தைய காலத்தில் கிராமங்களில் பொதுமக்கள் குடியிருப்பதற்காக பொதுவான நிலம் இருந்தது. நத்தம் குடியேற்ற திட்டம் அமல்படுத்தப்பட்டபோது கிராம நத்தம் நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டது.

    ஆனாலும் இன்னும் பலர் பட்டா இல்லாமல் வசிக்கிறார்கள். அவர்களுக்கு சொத்துவரி விதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் அடிப்படை வசதிகளை பெறுவதில் சவால்களை சந்திக்க நேரிடுகிறது.

    புறம்போக்கு நிலம் அரசு சொத்து என்பதால் இது தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம். சொத்து வரி விதிப்பதற்காக சென்னையில் பல்வேறு மண்டலங்களில் சுமார் 20 ஆயிரம் கட்டிடங்களை கொண்ட கிராம நத்தம் வகை நிலங்களை மட்டும் நாங்கள் கணக்கிட்டுள்ளோம். இந்த கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×