என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அஞ்சுகிராமம் அருகே 11-ம் வகுப்பு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
  X

  அஞ்சுகிராமம் அருகே 11-ம் வகுப்பு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐசக் ஸ்டீபன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
  • முதல்கட்ட விசாரணையில் ஐசக் ஸ்டீபன் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

  நாகர்கோவில்:

  அஞ்சுகிராம் அருகே அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஆல்பர்ட். இவரது மனைவி சகாய சின்சா.

  இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு ஐசக் ஸ்டீபன் (வயது 16), என்ற மகனும் (12) வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஐசக் ஸ்டீபன் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

  நேற்று ஆல்பர்ட், சகாயசின்சா இருவரும் வேலைக்கு சென்றனர். ஐசக் ஸ்டீபன் வீட்டில் பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். பள்ளிக்குச் சென்ற அவரது சகோதரி நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். பின்னர் அவரை தனது தாயார் வேலை பார்க்கும் வலை கம்பெனிக்கு அழைத்து சென்று தாயாரிடம் விட்டு விட்டு ஐசக் ஸ்டீபன் வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த ஐசக் ஸ்டீபன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதை பார்த்த அவரது உறவினர்கள் அஞ்சுகிராமம் போலீசுக்கும், அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தூக்கில் பிணமாக தொங்கிய ஐசக் ஸ்டீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  ஐசக் ஸ்டீபன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் ஐசக் ஸ்டீபன் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

  தற்கொலை செய்த ஐசக் ஸ்டீபனின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

  இதுகுறித்து அஞ்சு கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×