என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முதலுதவி பயிற்சியை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்
  X

  பொம்மையில் கைவைத்து முதலுதவி குறித்த சிகிச்சையை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் செய்து பார்த்தார்.

  மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முதலுதவி பயிற்சியை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மனித உருவம் கொண்ட பொம்மைகளின் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
  • முதலுதவி குறித்த விழிப்புணர்வுகள் இந்தியாவில் 1 சதவீத பேருக்கு தான் தெரியும்.

  தஞ்சாவூர்:

  மனிதர்களுக்கு திடீரென ஏற்படும் மாரடைப்பின் போது, நெஞ்சை அழுத்தி உயிர் காத்தல் எனும் முதலுதவி பயிற்சியை அமெரிக்கா தமிழ் மருத்துவர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

  தஞ்சை பன்னாட்டு லயன்ஸ் சங்க தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு செயல் விளக்கப் பயிற்சியை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

  பயிற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் ஐஸ்டீன் அருணாச்சலம், பொது மருத்துவர் கபிலன் தர்மராஜன் ஆகியோர் பயிற்சியை வழங்கினர்.

  இதில் செங்கல்பட்டைச் சேர்ந்த மருத்துவ பயிற்சியாளர்கள் ராஜாராமன், தீபா, உமா ஆகியோர் செயல்விளக்கப் பயிற்சிகளை வழங்கினர்.

  மனித உருவம் கொண்ட பொம்மைகளின் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, பாராட்டினார்.முன்னதாக அவர் முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் மூலம் கற்று கொண்டார்.

  அப்போது அவர் கூறும்போது:-

  மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க இதுபோன்ற பயிற்சியை மாணவர்கள் கற்று கொள்ள வேண்டும். எதற்கும் பயப்படாமல் மற்றவர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்றார்.

  இதுகுறித்து அமெரிக்க தமிழ் மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந் த ஐஸ்டீன் அருணாச்சலம், கபிலன் தர்மராஜன் ஆகியோர் கூறியதாவது:-

  இந்தியாவில் ஒரு நிமிடத்துக்கு 112 பேருக்கு மாரடைப்பு நோய் வருகிறது. மாரடைப்பு வரும்போது அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன என்பது இந்தியாவில் பலருக்கு தெரியாமல் உள்ளது.

  மாரடைப்பு வந்தால் நெஞ்சு பகுதியை தொடர்ந்து 30 வினாடிகள் அழுத்தினால் மாரடைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். அதற்கான முதலுதவி குறித்த விழிப்புணர்வுகள் உலகில் 80 சதவீதம் பேருக்கு தெரியும். ஆனால் இந்தியாவில் 1 சதவீதம் பேருக்கு தான் இந்த விழிப்புணர்வு தெரியும். எனவே இந்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிவு செய்தோம்.

  அதன்படி அமெரிக்கா தமிழ் மருத்துவ சங்கத்தின் சார்பில் ஒரு மாத காலம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள லயன்ஸ் சங்கங்களோடு இந்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வை நடத்தி வருகிறோம்.

  அதன்படி தஞ்சாவூரில் 6 கல்லூரிகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு இந்த பயிற்சியை நாங்களே நேரில் வழங்கினோம்.

  இந்த விழிப்புணர்வையும் அது குறித்த பயிற்சியையும் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அனைத்து கல்லூரி, பள்ளிகள் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றனர்.

  இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க நிர்வாகி எஸ்.முகமதுரபி , திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் பீட்டர் பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

  Next Story
  ×