search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி-வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு -கோப்பை
    X

    வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.

    தூத்துக்குடி அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி-வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு -கோப்பை

    • போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 8 அணிகள் பங்கேற்றன.
    • ஆண்கள் பிரிவில் முதல் பரிசை கோவை அணி பெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாள் விழா மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 9-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

    தருவைகுளம் முத்து ரஜினிகாந்த் கைப்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்மன்றமும் இணைந்து நடத்திய போட்டியில் தூத்துக்குடி, சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 8 அணிகள் பங்கேற்றன.

    2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற கோவை அணியும், 2-ம் பரிசை பெற்ற சென்னை அணிக்கும் பெண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற ஈரோடு அணிக்கும், 2-ம் பரிசை பெற்ற சென்னை அணிக்கும் ரொக்க பரிசு மற்றும் வெற்றி கோப்பைகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கர்நாடக மாநில ரஜினிகாந்த் ரசிகர்மன்ற தலைவர் சந்திரகாந்த் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்மன்றத்தினர் விஜய் ஆனந்த், ஜெயபால், அசோக்ராஜ், விஜய் சாம்சன், ரமேஷ் கார்த்திகேயன், கண்ணன், லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாநகராட்சி 5-வது வார்டு சேது பாதை ரோடு பகுதியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு லதா ரஜினிகாந்த் பாரத சேவா நிர்வாகிகள், துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினர். விருதுநகர் மண்டல பொறுப்பாளர் ரஜினி முருகன் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலெட்சுமி சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இணை ஒருங்கிணைப் பாளர் ராஜமனுவேல், நிர்வாகிகள் குமாரசாமி, செல்வம், சிரிதேவி, முனீஸ்வரி, ஜோதி காமாட்சி, கோவில்பட்டி முத்து மாரியப்பன், விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×