search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேகத்தடை
    X

    பேராவூரணி பேரூராட்சி தலைவரிடம் மனு அளித்த கவுன்சிலர்.

    வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேகத்தடை

    • பேராவூரணி வாரச்சந்தை ஆகிய முக்கிய பகுதிகளாக விளங்கி வரும் சூழ்நிலையில் சாலையில் செல்லும் வாகனங்கள் மிக வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன.
    • எதிரே வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்படுகின்றன.

    பேராவூரணி:

    பேராவூரணியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணி மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்து புதிய சாலைகள் அமைக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைத்து, சாலை நடுவே சென்டர் மீடியன் இருவழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த முதன்மைச் சாலையில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, நீலகண்ட பிள்ளையார் கோவில், பள்ளிவாசல், பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையம், பேராவூரணி வாரச்சந்தை ஆகிய முக்கிய பகுதிகளாக விளங்கி வரும் சூழ்நிலையில் சாலையில் செல்லும் வாகனங்கள் மிக வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன.

    மேலும் சென்டர் மீடியன் இடைவெளியில் சாலை பிரிவு உள்ளது. இந்த சாலை பிரிவில் வாகனங்கள் குறுக்கே சென்று முதன்மைச்சாலையில் இணையும்போது எதிரே வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்படுகின்றன.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை ஆய்வு செய்து விபத்து ஏற்படாத வகையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்கவும், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பேராவூரணி 11 -வது வார்டு கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஷ்குமார் பேராவூரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், செயல் அலுவலர் பழனிவேல் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார்.

    Next Story
    ×