search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமானுஜபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்- கலெக்டர் பங்கேற்பு
    X

    சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு பேசினார்.

    ராமானுஜபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்- கலெக்டர் பங்கேற்பு

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து விரைந்து முடிக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் ராமானுஜபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.

    அந்த வகையில் ராமானுஜபுரம் ஊராட்சி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ம், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதித்து பொதுமக்களு டைய பல்வேறு கோரிக்கை களை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, பாபநாசம் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சுதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×