என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வியாபாரிக்கு கத்திக்குத்து
  X

  வியாபாரிக்கு கத்திக்குத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரோட்டில் கரும்பு சாறு கடை வைத்து நடத்தி வருகிறார்
  • அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது

  கோவை :

  கோவை தெற்கு உக்கடம புல்லுக்காட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40). இவர் உக்கடம் பைபாஸ் ரோட்டில் கரும்பு சாறு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இரவு நேரத்தில் தனது கரும்பு சாறு எந்திரத்தை வீட்டின் அருகே மாட்டு இறைச்சி கடை வைத்து நடத்தி வரும் பசீர் (39) என்பவரது கடை முன்பு வைத்து இருந்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தற்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பசீர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராஜன் (47), நவீன் (27) ஆகியோருடன் சேர்ந்து தாக்கினார். பின்னர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து நாகராஜின் தலையில் குத்தினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அவரது மனைவி மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து பெரியக்கடை வீதி போலீசார் கொைல முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×