என் மலர்tooltip icon

    சேலம்

    • நாமக்கல்லில் மாலை 4 மணியளவில் நடைபெறும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி சேலம், நாமக்கல் மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (17-ந் தேதி) பிற்பகல் 4 மணியளவில் ஈரோட்டில் இருந்து கார் மூலம் சேலம் வருகிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான சங்ககிரி அருகே மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் திரளாக பங்கேற்கிறார்கள்.

    தொடர்ந்து சேலம் வரும் அவர் அடுத்த மாதம் 17-ந்தேதி பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டு திடலுக்கு செல்கிறார். அங்கு மாநாட்டு பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநாட்டு வழிகாட்டு குழுவினருடன் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் இரவில் சேலத்திற்கு வரும் அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார்.

    18-ந் தேதி காலை சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து சிறப்புரையாற்றுகிறார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், இளைஞரணி அமைப்பாளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    தொடர்ந்து அன்று பிற்பகல் நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். நாமக்கல்லில் மாலை 4 மணியளவில் நடைபெறும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி சேலம், நாமக்கல் மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
    • அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (55). இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழையினால் கிணற்றை சுற்றி சேறும், சகதியுமாக இருந்துள்ளது.

    இதனால் எதிர்பாராத விதமாக கால் வழுக்கி 20 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் செல்வமணி தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செல்வகுமாரை உயிருடன் மீட்டனர். அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்டம் தம்மம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்டம் தம்மம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதையொட்டி நாளை (16-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தம்மம்பட்டி நகரம், ஜங்கமசமுத்திரம், கொண்டையம்பள்ளி, மூலப்புதூர், கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், நாரைகிணறு, கீரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

    • சேலம் சூரமங்கலத்தை அடுத்த சேலத்தாம்பட்டியை சேர்ந்தவர் குமார் , மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி, இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலத்தை அடுத்த சேலத்தாம்பட்டியை சேர்ந்தவர் குமார் , மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (29), இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் குமார் கடந்த தீபாவளி பண்டிகையன்று குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். மேலும் தீபாவளிக்கு புதிய ஆடைகள் எதுவும் எடுத்து கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரேவதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை பார்த்த உறவினர்கள்அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன்கள் கோகுல் (வயது 12), பிரசாந்த் (10). இவர்கள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 7 மற்றும் 5-ம் வகுப்பு தங்கி படித்து வந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவர்க ளையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன்கள் கோகுல் (வயது 12), பிரசாந்த் (10). இவர்கள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 7 மற்றும் 5-ம் வகுப்பு தங்கி படித்து வந்தனர்.

    இதே போல பெரிய கிணறு பகுதியை சேர்ந்த செந்தமிழ் குமரன். இவரது மகன் மயிலேஷ் (8). இவரும் அதே பள்ளியில் தங்கி 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 3 பேரும் பள்ளியில் இருந்து திடீரென மாயமாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவர்க ளையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • பா.ஜனதா அரசை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டப்ப நாயக்கன்பட்டி கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர தலைவர் ஏ.ஆர்.பி. பாஸ்கர் தலைமையில் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

    சேலம்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டப்ப நாயக்கன்பட்டி கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர தலைவர் ஏ.ஆர்.பி. பாஸ்கர் தலைமையில் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, மாநகர வர்த்தக பிரிவு தலைவர் எம்.டி சுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மெடிக்கல் பிரபு, பச்சப்பட்டி பழனி, திருமுருகன், மாநில சேவாதள பிரிவு வெங்கட்ராஜ், மாநில வக்கீல் பிரிவு பொதுச்செயலாளர் தேன்மொழி பிங்கி, கொண்டப்ப நாயக்கன்பட்டி கிராம கமிட்டி தலைவர் காமராஜ், மண்டல தலைவர்கள் ராமமூர்த்தி, சாந்தமூர்த்தி, நிசார் அஹமது, மோகன், ராமன், நாகராஜ் கோவிந்தராஜ், மாநகர செயலாளர் சஞ்சய் காந்தி, சுப்பிரமணியன், ஆரோக்கியநாதன் இளைஞர் காங்கிரஸ் அம்மாபேட்டை கோவிந்தன், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் எம்.பாலப்பட்டியில் உள்ள கனரா வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் மாநகர தலைவர் பிரபு தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில பொதுச் செயலாளர் எம்.ஆர். சுரேஷ், மாநில செயலாளர் வசந்தம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக நூதன முறையில் சட்டி ஏந்தி 100 நாள் வேலை திட்டத்தை முடக்காதே என கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பொதுக்குழு உறுப்பினர் தனசேகர், மணி, காளியண்ணன், அல்லிகுட்டை ராமசாமி, ராமநாதன், குணாலினிசக்தி, கதிரவன், வரதராஜ், ஏழுமலை, பிரகாஷ், பூபதி, சேட்டு, ரஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளான மழைநீர் வடிகால் வசதி, சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

    குறிப்பாக, 12.90 சதுர கீலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 20,498 மக்கள் தொகை கொண்டதாகும். பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ஆத்தூர் - நகரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் 1.552 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு தற்போது நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 76 லிட்டர் தினசதி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் சாலை வசதிகளைப் பொறுத்தவரை பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 2022-2023 நிதியாண்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வி.ஐ.பி நகர் பகுதியில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டிலும், பாலாண்டியூர் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.96 கோடி மதிப்பீட்டிலும், நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.98 கோடி மதிப்பீட்டிலும், முத்து ஹேவே நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் என ஆக மொத்தம் 15.402 கிலோ மீட்டர் நீளத்தில், ரூபாய் 11.34 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் மற்றும் மழைநீர்வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தெருவிளக்கு, குப்பைகள் சேகரித்து தரம் பிரித்தல் என பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்ட துடன், பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் பணிகளை செய்து முடித்திட வேண்டுமென அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியளார் துரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகா விஷ்ணு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ்ராம், பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் செவ்வாய்ப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே திருமணிமுத்தாற்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. மூதாட்டி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே திருமணிமுத்தாற்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடலை மீட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை.

    மூதாட்டி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் தொல்லையும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சேலம் சூரமங்கலம் பெருமாம்பாளையம் ரோடு பகுதிைய சேர்ந்தவர் முருகானந்தம், இவர் சொந்த மாக கார்கள் வைத்து வாடகைக்கு இயக்கி வந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் பெருமாம்பாளையம் ரோடு பகுதிைய சேர்ந்தவர் முருகானந்தம் (40), இவர் சொந்த மாக கார்கள் வைத்து வாடகைக்கு இயக்கி வந்தார்.

    இந்த நிலையில் கடன் தொல்லையும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த மனைவி மற்றும் குழந்தைகள் கதறி துடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு ஜாமியா மஜித் முத்தவல்லி அன்வர் தலைமை தாங்கினார். செயலாளர் நசீர் அகமத், ஜாமியா மஸ்ஜித் இமாம் சுஹேல் அகமது காஸிமி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாமியா மஜித் முத்தவல்லி அன்வர் தலைமை தாங்கினார். செயலாளர் நசீர் அகமத், ஜாமியா மஸ்ஜித் இமாம் சுஹேல் அகமது காஸிமி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    இதில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாஸ்கர், இந்திய முஸ்லிம் லீக் அன்சர் பாஷா, மனிதநேய மக்கள் கட்சி பாரூக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காஜாமைதீன், பொதுக்குழு உறுப்பினர் நாசர்கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் லைன்மேடு முத்தவல்லி ஆப்சல் ஷெரீப் நன்றி கூறினார்.

    • பாவளி பண்டிகையை யொட்டி கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • கடந்த ஆண்டை விட 1.33 லட்சம் கி.மீ.. கூடுதலாக இயக்கி 65.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைத்து பணியா ளர்களின் கூட்டு முயற்சியே இத்தகைய இலக்கை அடைய முடிந்தது

    சேலம்:

    சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-

    தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அத்துடன் மாற்று பஸ்கள், வழித்தட பஸ்கள், தட நீட்டிப்பு, கூடுதல் நடைகளும் இயக்கப் பட்டன. இதன்மூலம் 4 நாட்களில் டவுன் பஸ்களில் 39 லட்சம் பயணிகள், புறநகர் பஸ்களில் 23 லட்சம் பயணிகள் என மொத்தம் 62 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

    தினமும் சராசரியை விட டவுன் பஸ்களில் கூடுதலாக 45 ஆயிரம் பேர், புறநகர் பஸ்களில் 56 ஆயிரம் பேர் என மொத்தம் 1 லட்சத்து ஆயிரம் பேர் கூடுதலாக பயணித்து உள்ளனர். அவர்களுக்காக 39 லட்சம் கி.மீ. பஸ்கள் இயக்கப்பட்டு 11.03 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட 1.33 லட்சம் கி.மீ.. கூடுதலாக இயக்கி 65.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைத்து பணியா ளர்களின் கூட்டு முயற்சியே இத்தகைய இலக்கை அடைய முடிந்தது என அவர் அதில் கூறி உள்ளார்.

    • பகல், இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
    • தற்போது தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டுதோறுமே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் இங்குள்ள காட்சி முனைகளை ரசித்து பார்த்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள்.

    குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் ஏற்காடு நகரமே களை கட்டும்.

    கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதையில் உள்ள பல்வேறு அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். மேலும் தொடர் மழையின் காரணமாக குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    பகல், இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவட்டர், உல்லன் ஆடைகளை அணிந்து வந்து செல்கிறார்கள். மேலும் பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் டிரைவர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    மதியம் 3 மணிக்கு மேல் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. அது காலை 10 மணி வரை நீடிக்கிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி வந்து செல்கிறது. மேலும் சுற்றுலா பயணிகள் சிலர் உல்லன் ஆடைகளை அணிந்து கொண்டு பனிமூட்டத்தில் நடைபயிற்சி சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் சிலர் பனிமூட்டத்தில் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    தற்போது தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. ஆனால் சேலம் மற்றும் ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பேர் தினமும் வந்து செல்கிறார்கள். அவர்கள் ஏற்காட்டில் நிலவி வரும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகிறார்கள்.

    ×