சாலையோரம் பிணமாக கிடந்த பெண்

மேச்சேரி-ேமட்டூர் சாலையில் குள்ளமுடையானூர் பெட்ரோல் பங்க் அருகில் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொட்டனேரி கிராம நிர்வாக அதிகாரி அமுதாவிற்கு தகவல் கிடைத்தது.அவர் யார், எந்த ஊைர சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலையோரம் பிணமாக கிடந்த பெண்
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் மேச்சேரி-ேமட்டூர் சாலையில் குள்ளமுடையானூர் பெட்ரோல் பங்க் அருகில் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொட்டனேரி கிராம நிர்வாக அதிகாரி அமுதாவிற்கு தகவல் கிடைத்தது.

உடனே அங்கு விரைந்து சென்ற அவர் மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணின் உடலில் காயம் இருந்ததால் அவர் வாகனம் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது உடலை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊைர சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com