என் மலர்
சேலம்
- சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரை சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார்.
- சிலம்பரசன் இவரது மனைவி செல்வ குமாரி (28), இவருக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரி அங்கிருந்த விவசாய கிணற்றில் குதித்து விட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அபினவம் காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி செல்வ குமாரி (28), இவருக்கும் அவரது கணவ ருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்க ளுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரி அங்கிருந்த விவசாய கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை காப்பாற்ற முயன்றனர்.
ஆனாலும் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது தாய் பரமேஸ்வரி ஏத்தாப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வெங்கடேசன் (28), இவர் வாய் பேச முடியாதவர். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
- நேற்று முன்தினம் இரவு உடல் நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் வெங்கடேசன் (28), இவர் வாய் பேச முடியாதவர். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உடல் நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் தொடங்கியதும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கி ஜனவரி 20-ந் தேதி வரை நடைபெறும்.
- அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.
சேலம்:
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் தொடங்கியதும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கி ஜனவரி 20-ந் தேதி வரை நடைபெறும். அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.
இதற்காக கார்த்திகை முதல் தேதியில் அய்யப்பன் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்பவார். அதன்படி நாளை கார்த்திகை 1-ந் தேதி தொடங்க உள்ளதால் சேலம் சின்ன கடை வீதியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
குறிப்பாக துளசி மணி, அய்யப்பன் டாலர் மற்றும் அய்யப்பன் வேட்டி உள்ளிட்ட விரத பொருட்கள் வாங்குவதற்கும் இருமுடி பொருட்கள் வாங்குவதற்கும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் விரதப் பொருட்களை காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
இதே போல செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விரதப் பொருட்களை வாங்க பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. பொருட்களை வாங்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
+4
- இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காடையாம்பட்டி:
இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காடையாம்பட்டி
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க கோரியும், வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீவட்டிப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காடையாம்பட்டி மேற்கு வட்டார தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய கவுன்சிலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காடையாம்பட்டி கிழக்கு வட்டார தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மேலும் இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ், நகரத் தலைவர் ஹரிசந்திரன், கிராம கமிட்டி தலைவர் பழனி தேவன், நிர்வாகிகள் பெருமாள், தர்மலிங்கம், மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்காடு
ஏற்காட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஏற்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்ஆனந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தாரமங்கலம்
தாரமங்கலம் சந்தைப் பேட்டை அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு தாரமங்கலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு. மாவட்டத் துணைத் தலைவர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதி செல்வம், நிர்வாகிகள் லக்ஷ்மன், தட்சிணாமூர்த்தி, மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்ககிரி
சங்ககிரியில் உள்ள ஸ்டேட் பேங்க் முன்பு சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்குமார் தலைமை வகித்தார். சங்ககிரி வட்டார தலைவர் சரவணன், நகர தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், மாவட்ட பொது செயலாளர்கள் நடராஜன், பழக்கடை ராமமூர்த்தி, சின்னுசாமி, மூத்த நிர்வாகிகள் அங்கமுத்து, ஆறுமுகம், இஸ்மாயில், காமராஜ், சந்திரன், ஜெகநாதன், பஸ் ஆறுமுகம், விஸ்வநாதன், கிரி, ரவி, பரமன், மளிகை குமார், மாணவர் காங்கிரஸ் அகில், வெர்ஸிலி, இளைஞர் காங்கிரஸ் கார்த்தி, தேவூர் நாகேந்திரன், பொன்சித்தையன், அரசிராமணி ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து துண்டுப் பிரசுரத்தை கிராமப்புற மக்களிடையே விநியோகித்தனர்.
- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.74 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வினாடிக்கு 3239 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- சுந்தரம் (41). கூலி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் இடையே குலதெய்வ கோவில் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.
- இந்த நிலையில் சுந்தரத்தின் உறவினரான பூசாரி என்பவர் இறந்து விட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மயானத்திற்கு சுந்தரம் சென்றுள்ளார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.என்.பட்டி கோவிலூர் காலனியை சேர்ந்தவர் சுந்தரம் (41). கூலி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் இடையே குலதெய்வ கோவில் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.
இந்த நிலையில் சுந்தரத்தின் உறவினரான பூசாரி என்பவர் இறந்து விட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மயானத்திற்கு சுந்தரம் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து குளித்து கொண்டிருந்த சுந்தரத்தை, அங்கு வந்த குப்புசாமி, செல்லதுரை, நாகராஜ், மோகன்ராஜ், மதன்மோகன் ஆகிய 5 பேரும் சேர்ந்து எதற்காக காரியத்திற்கு வந்தாய்? உன்னை யார் வர சொன்னது? என்று கூறி கல்லாலும் கட்டையாளும் அடித்து உதைத்தனர்.
இதில் காயமடைந்த சுந்தரம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த அவர் அளித்த புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மலர்க்கொடி (40) விவசாய தொழிலாளியான இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
- ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து விவசாயிகள் ஓடி வந்தனர். இதை கண்ட மர்ம விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டன.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி ரெட்டிபட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் மலர்க்கொடி (40).
விவசாய தொழிலாளியான இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
மர்ம விலங்குகள்
நேற்று அவர் அப்பகுதி உள்ள தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது அப்பகுதியில் நுழைந்த மர்ம விலங்குகள் சில திடீரென்று ஆடுகளை கடித்துக் குதறியது.
ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து விவசாயிகள் ஓடி வந்தனர். இதை கண்ட மர்ம விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டன.
அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது தோட்டத்தில் கட்டி இருந்த 11 ஆடுகளில் 7 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்திருந்தது. இதனால் அவை ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள கால்நடைத்துறையினர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஆடுகள் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் அடிக்கடி இது போன்று மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிர் இழப்பதால் தங்களுக்கு பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
- தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பிரிவு ரோடு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள் (47).
- மகனை விட்டுவிட்டு தீபாவளி கொண்டாட முடியாத மனவேதனையில் இருந்த செல்வபெருமாள் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பிரிவு ரோடு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள் (47).
தாயுடன் சண்டை
கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மூர்த்தி (25) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது தாய் கோவிந்தம்மாளிடம் சண்டை போட்டுக்கொண்டு தாரமங்கலத்தில் உள்ள ஒரு பூக்கடையில் தங்கி வேலை செய்து வருகிறார்.
கடந்த 3 மாதமாக மூர்த்தி வீட்டிற்கு வராததால் தந்தை செல்வபெருமாள் தீபாவளியன்று வீட்டில் கறி குழம்பு சமைத்து வைத்துவிட்டு மகனை சாப்பிடுவதற்காக அழைக்க சென்றுள்ளார்.
அப்போது பூக்கடையில் இருந்த மூர்த்தி தனது தந்தையிடம் கோபமாக பேசி வீட்டிற்கு வர முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
தற்கொலை
இதனால் மகனை விட்டுவிட்டு தீபாவளி கொண்டாட முடியாத மனவேதனையில் இருந்த செல்வபெருமாள் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த செல்வபெருமாள் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இது பற்றி செல்வபெருமானின் மனைவி கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனை விட்டுவிட்டு பண்டிகை கொண்டாட முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பிரிவு ரோடு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள் (47).
- சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமை வகித்தார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன் முன்னிலை வகித்தார். சேலம் மாவட்ட துணை செயலாளர் சத்தியமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் கீழ்நிலை பணியாளர்கள் 20 சதவீதம் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் பதவி உயர்வு ஆணை வழங்கிட வேண்டும். தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அரசு நிலையாக்கப்படாத பணியிடை காலமான அனைத்து ஊழியர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க வேண்டும். அனைத்து பேரூராட்சியிலும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஓட்டுனர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் வருகின்ற டிசம்பர் மாதம் 13-ந் தேதி அனைத்து மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா அவர்கள் மறைவையொட்டி மவுனஅஞ்சலி செலுத்தினர்.
- பூசாரிபட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் அருணாச்சலம் (31). இவரது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.
- சம்பவதன்று அதிகாலை பார்த்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளை காணவில்லை.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த பூசாரிபட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் அருணாச்சலம் (31). இவரது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். சம்பவதன்று அதிகாலை பார்த்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அருணாச்சலம் இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சந்தேக அடிப்படையில் கே.மோரூர் சவுல்பட்டி கொட்டாய் பகுதியை சேர்ந்த சேட்டு (32) என்பவரை பிடித்து விசாரித்தனர். இவர் பூசாரிபட்டியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு வந்தபோது அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்து.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் சுமார் 100ஆண்டுகளுக்கு மேலாக தினசரி பெரிய மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது.
- உடனடியாக அதிகாரிகள் சேறும் சகதியுமாக உள்ள மார்க்கெட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரி களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் சுமார் 100ஆண்டுகளுக்கு மேலாக தினசரி பெரிய மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது,
இந்த மார்க்கெட்டுக்கு உள்ளுர் வியாபாரிகள் மட்டுமின்றி
வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சில்லரை வியாபாரிகள் மினி சரக்கு வாகனங்களில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்,
மழை
இதனையடுத்து தற்போது கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது இதனால் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் மழைநீர் குட்டை குட்டையாக தேங்கி சேறும் சகதியுமாக காணப்படு வதால் வெளியூரிலிருந்து வரும் சில்லரை வியாபாரிகள் காய்கறிகளை தாங்கள் கொண்டு வந்த மினி ஆட்டோவில் ஏற்றிச் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் மேலும் காய்கறிகளை வாங்கவதற்கு கூட நடந்து செல்லமுடியாமல் சேற்றிலேயே நடந்து சென்று வாங்கிய அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
உடனடியாக அதிகாரிகள் சேறும் சகதியுமாக உள்ள மார்க்கெட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரி களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மார்கெட்டை சரிசெய்யாவிட்டால் சிஐடியு, மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கங்கள் இணைந்து சேற்றில் நாற்று நடும் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.






