என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெயிண்ட் அடிக்க சென்ற வீட்டில் கைவரிசை 6½ பவுன் நகை திருடிய தொழிலாளி கைது
    X

    பெயிண்ட் அடிக்க சென்ற வீட்டில் கைவரிசை 6½ பவுன் நகை திருடிய தொழிலாளி கைது

    • மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி முருகாயி (42).
    • பெயிண்ட் அடிக்கும் பணி முடிவடைந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு அணிந்து கொள்வதற்காக பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை முருகாயி எடுக்க சென்றுள்ளார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி முருகாயி (42).

    பெயிண்ட் அடிக்கும் பணி

    இவரது வீட்டிற்கு பெத்தநாயக்கன்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது கவர்கல்பட்டியில் வசித்து வருபவருமான மாரியப்பன் (29) என்ற வாலிபர் கடந்த மாதம் தொழிலாளர்களுடன் இணைந்து பெயின்ட் அடிக்கும் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

    பெயிண்ட் அடிக்கும் பணி முடிவடைந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு அணிந்து கொள்வதற்காக பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை முருகாயி எடுக்க சென்றுள்ளார். அப்போது நகைகள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    6½ பவுன் திருட்டு

    உடனடியாக இதுகுறித்து வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் பெருமாயி வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் பீரோவில் வைத்திருந்த 6½ பவுன் நகைகளை மாரியப்பன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×