பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

சுலோச்சனா (32). இவரும் இவரது தாயார் சின்னப்பொண்ணு என்பவரும் மருத்துவமனைக்கு செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பஸ் நிறுத்தம் அருகே அவ்வழியாக சென்ற தனியார் டவுன் பஸ்சில் ஏற முயன்றனர். தனது தாயார் சின்னப்பொண்ணு பஸ்சில் ஏறாததை கண்ட சுலோச்சனா பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் சுலோச்சனா (32). இவரும் இவரது தாயார் சின்னப்பொண்ணு என்பவரும் மருத்துவமனைக்கு செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பஸ் நிறுத்தம் அருகே அவ்வழியாக சென்ற தனியார் டவுன் பஸ்சில் ஏற முயன்றனர்.

தவறி விழுந்தார்

அப்போது தனது தாயார் சின்னப்பொண்ணு பஸ்சில் ஏறாததை கண்ட சுலோச்சனா பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுலோச்சனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விசாரணை

இந்த விபத்து குறித்து சுலோச்சனாவின் சகோதரி வெண்ணிலா (34) கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சென்றபோது பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் தாய் கண்ணெதிரே பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com