search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.25 கோடி மதிப்பில் கடனுதவி
    X

    கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.25 கோடி மதிப்பில் கடனுதவி

    • ஒவ்வொரு ஆண்டும் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சேலம் அழகாபுரத்தில் உள்ள கூட்டுறவு சமுதாய கூடத்தில் 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    சேலம்:

    ஒவ்வொரு ஆண்டும் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி முதல் கூட்டுறவு சங்கங்களில் கொடி ஏற்றுதல், உறுதிமொழி ஏற்பு, மரக்கன்றுகள் நடுதல், இலவச கால்நடை சிகிச்சை முகாம், விவசாயிகள் மகளிர் சுய உதவிகுழுக்கள் மற்றும் விவசாய கூட்டு பொறுப்பு குழுக்கள் பங்கு பெறும் உறுப்பினர் சந்திப்பு முகாம், பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டி, ஓவியப் போட்டி, கூட்டுறவு அமைப்புகளை பரவலாக்குதல் மற்றும் எளிமைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள், பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நாளை (19-ந் தேதி) மாலை சேலம் அழகாபுரத்தில் உள்ள கூட்டுறவு சமுதாய கூடத்தில் 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை, ஆவின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, சேகோசர்வ், மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு துறைகளின் 1,033 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு இணைப்பதிவாளர் தலைமையின் கீழ் 362 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சிறப்பாக செயல்பட்டுவரும் கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு சுமார் ரூ.25 கோடி மதிப்பில் கடனுதவிகளை அமைச்சர் வழங்க உள்ளார்.

    கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் மாநகராட்சி மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×