சேலம் அருகே குடிபோதையில் தகராறு வெந்நீர் ஊற்றப்பட்ட தொழிலாளி சாவு

சின்னசாமி. இவரது மகன் அபிமன்னன் (46), திருமணம் ஆகாத இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். அபிமன்னன் பறைவை காடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஓமலூரை சேர்ந்த கருணாநிதி (55) என்பவருடன் தகராறு ஏற்பட்டது.
சேலம் அருகே குடிபோதையில் தகராறு வெந்நீர் ஊற்றப்பட்ட தொழிலாளி சாவு
Published on

சேலம்:

சேலம் கருப்பூரை அடுத்த மூங்கில்பாடி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் அபிமன்னன் (46), திருமணம் ஆகாத இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

தகராறு-மோதல்

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி குடிபோதையில் இருந்த அபிமன்னன் பறைவை காடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஓமலூரை சேர்ந்த கருணாநிதி (55) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருணாநிதி அங்கிருந்த வெந்நீரை எடுத்து அபிமன்னன் மீது ஊற்றினார். இதில் அவரது கை வெந்தது. ஆனாலும் குடி போதையில் இருந்த அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் சுற்றி வந்தார்.

தொடர்ந்து மருந்து போடாத நிலையில் அபிமன்னன் கை அழுகியதால் வலி தாங்க முடியாமல் அபி மன்னன் துடித்தார். பின்னர் அவரது தாய் பழனியம்மாளிடம் கூறினார். பழனியம்மாள் அவரை நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அபிமன்னன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி கருணாநிதியை தேடி வருகிறார்கள். மேலும் வெந்நீர் ஊற்றியதால் அபிமன்னன் இறந்ததால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவது தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.   

X

Maalai Malar
www.maalaimalar.com