search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fort"

    • கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • தற்போது நுழைவு வாயில்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வேகமாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கோட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து இன்று வருவாய்த்துறையினர் மற்றும் இந்து அறநிலைத்துறை மற்றும் திருத்தண்டர் சபை நிறுவனர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அந்த ஆய்வின் போது கோவிலின் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டிடங்களின் தன்மை தொடர்பாகவும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், கோவிலில் ஒவ்வொரு திருவிழாவின்போதும் பல்லாயிரம் பேர் பொங்கல் இடுவார்கள். ஆனால் கோயிலில் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக பக்தர்கள் வெளியேறும் வகையில் வாசல்கள் பெரிய அளவில் முன்பு இருந்தது.

    தற்போது நுழைவு வாயில்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வேகமாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. கட்டிடங்கள் இடிந்து விடும் நிலையில் உள்ளதால் விபத்து சூழல் உள்ளது.

    எனவே இதுகுறித்து வருகிற 15-ந் தேதி அறிக்கையாக தயாரித்து சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிப்போம். பின்னர் கோர்ட் உத்தரவு படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை தொடங்குகிறது.
    • கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்வார்கள் என்பதால்கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. எட்டு பட்டியை கட்டு ஆளும் அன்னை முதன்மை பெற்ற கோட்டையில் எழுந்தருளி பெரிய மாரியம்மன் என்னும் திருநாமத்தில் பொது மக்களுக்கு அருளாட்சி புரிகிறார்.

    21 நாட்கள்

    தற்போது திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால் வழக்கமான திருவிழாவில் சில மாற்றங்கள் செய்ய ப்பட்டு நாளை 25-ந் தேதி முதல் (ஆடி மாதம் 9-ந் தேதி) அடுத்த மாதம் 15-ந் தேதி வைரை 21 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இந்தாண்டு ஆடித்திருவிழா கடந்த 17-ந் தேதி மூகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூைஜகள் நடக்கிறது.

    பூச்சாட்டுதல் விழா

    விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நாளை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கொடுக்கும் பூக்களை அம்மனுக்கு சாத்தி சிறப்பு பூைஜகள் நடைபெறும். கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி சக்தி அழைப்பு நிழ்ச்சியும், 9,10 மற்றும் 11-ந் தேதிகளில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு பிரார்த்தனை செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 15-ந் தேதி பால்குட ஊர்வலம், மகா அபிஷேகம், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதானை நடக்கிறது.

    கூடுதல் பாதுகாப்பு

    இந்த நாட்களில் கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்வார்கள் என்பதால்கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    • கல்லணையில் இருந்து பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் பிரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதத்தில் அணை திறக்கப்பட்டது. அதாவது கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் கல்லணையை 27-ந்தேதி வந்தடைந்ததையடுத்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் பிரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஆனால், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கல்லணை கால்வாயில் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு பாலப்பணிகள் நடைபெற்றதால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 12 நாட்கள் ஆகியும், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் நாற்று கூட விடாமல் தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

    இந்தநிலையில் கல்லணை திறக்கப்பட்டு 9 நாட்களுக்குப்பிறகு நேற்று கல்லணை கால்வயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையிலிருந்து கல்லணை கால்வாயில் நேற்று காலை முதல் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பின்னர், மாலையில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 250 கன அடி வீதமாக உயர்த்தப்பட்டது. உயர்த்தப்படும் மேலும் கல்லணைக் கால்வாயில் விடப்படும் தண்ணீர் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என நீர் வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×