search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்க நகை கடை நடத்தி பல கோடி ரூபாய் மோசடி

    • சபரி சங்கர் சேலம் சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், அம்மாபேட்டை, நாமக்கல் , திருச்செங்கோடு, கரூர், திருச்சி, கோவை உள்பட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்தார்.
    • 11 கடைகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் சபரி சங்கர். இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், அம்மாபேட்டை, நாமக்கல் , திருச்செங்கோடு, கரூர், திருச்சி, கோவை உள்பட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்தார்.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட ஏஜென்சி அலுவலகம் நடத்தி தங்க நகை சேமிப்பு திட்டம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, பொங்கும் தங்கம், பழசுக்கு புதுசு என்ற திட்டத்தில் பழைய தங்கத்துக்கு மாற்றாக புதிய தங்கம் என பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வாடிக்கை யாளர்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்தார்.

    இதில் 11 கடைகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் அந்தந்த மாவட்டங்களில் புகார் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர்.

    தங்க நகை கடை உரிமையாளர் சபரி சங்கர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் . மேலும் அந்த கடையில் பணிபுரிந்த மேலாளர், மாவட்ட அளவிலான அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகளும் தலைமறைவாகியுள்ளனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அந்த நகைக்கடையின் மாவட்ட மேலாளர், மண்டல மேலாளர் உள்பட 14 பேரை அந்த நிறுவனத்தின் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கோவை, தர்மபுரி மாவட்ட மார்க்கெட்டிங் ஏஜெண்டு களே பிடித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள போலீசாரிடம் இன்று ஒப்படைத்தனர்.

    இது பற்றி மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் கூறிய தாவது:-

    பொதுமக்களிடம் நாங்கள் எஸ்.வி.எஸ் தங்க நகை நிர்வனம் அறிவித்தபடி பழைய தங்கத்திற்கு மாற்றாக புதிய தங்கம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, தங்க நகை சேமிப்பு திட்டம் என பல்வேறு வழிகளில் பணத்தை வசூல் செய்து கடையில் கட்டினோம்.

    ஆனால் தற்போது இந்த நகைக்கடையை பூட்டிவிட்டு உரிமையாளர் தலைமறை வாகிவிட்டார் . மேல்மட்ட அதிகாரிகள் அந்த நகை கடையில் உள்ள தங்க கட்டிகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். அவர்களில் சிலரை பிடித்து சேலம் கலெக்டர் அலுவலக போலீ சிடம் ஒப்படைத்துள்ளோம்.

    நாங்கள் பொதுமக்களிடம் பணம் நேரடியாக வசூல் செய்ததால் எங்களை வீட்டில் இருக்க விடாமல் பொதுமக்கள் விரட்டுகின்றனர். இதனால் நாங்கள் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே மாவட்ட அளவிலான அதிகாரி களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினால் உரிமையாளர் சபரி சங்கர் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவரும்.

    உடனடியாக அவரை பிடித்து பொதுமக்களின் பணம் மற்றும் நகையையும் மீட்டு தர வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால் நாங்கள் நிம்மதியாக வீட்டில் இருக்க முடியாது. எனவே எங்களுக்கு அந்த பணத்தை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    அப்போது அவர்களுடன் வந்த பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்கள் கூறு கையில், ஒவ்வொருவரும் 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணம் கட்டியதாகவும் தற்போது பணத்தை இழந்து நடுத்தெருவில் இருப்பதா கவும் இதனால் திருமணம் போன்ற முக்கிய காரியங்கள் நடத்த முடியாமல் தவிப்பதாகவும் கூறினர்.

    தங்களது பணத்தை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் விட்டு கதறியபடி பெண்கள் புகார் கூறினார்.

    தொடர்ந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட தங்க நகை நிறுவனத்தின் அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×