search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில்  காணப்படும் பள்ளங்களால் விபத்து அபாயம் - நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
    X

    சாலையில் காணப்படும் பள்ளங்களை படத்தில் காணலாம்.

    செங்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் காணப்படும் பள்ளங்களால் விபத்து அபாயம் - நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

    • கேரளாவில் இருந்து புளியரை சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களும் பிரானூரை கடந்தே செல்ல வேண்டும்.
    • சாலையில் மழைநீர் தேங்குவதால் பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ளது பிரானூர் பார்டர். இது தமிழக -கேரளாவை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்குகிறது.

    முக்கிய சாலை

    கேரளாவிற்கு செல்லவும், கேரளாவில் இருந்து புளியரை சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களும் பிரானூரை கடந்தே செல்ல வேண்டும். இதனால் தினசரி ஆயிரக்கனக்கான வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்கிறது.

    இதில் பிரானூர் பார்டர் திப்பாச்சியம்மன் கோவில் பின்புறம் குற்றாலம் இணைப்பு சாலை தேசிய நெடுஞ்சாலை எல்லையில் அமைந்துள்ளது. இச்சாலை வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

    பழுதான சாலை

    இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை எல்லையில் அமைந்துள்ள பிரானூர் பார்டர் திப்பாச்சியம்மன் கோவில் அருகாமையில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.

    மேலும் கழிவுநீர் ஓடை சீரமைக்கப் படாததால் பருவமழை காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    பிரானூர் முதல் புளியரை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவில் காணப்படும் இது போன்ற பள்ளங்கலால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு நடவடிகை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வவர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×