search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- சர்வதேச உரிமைகள் கழக நிறுவனர் வலியுறுத்தல்
    X

    கூட்டத்தில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் நிறுவனர் எஸ்.சுரேஷ்கண்ணன் பேசியபோது எடுத்தபடம். அருகில் மாவட்ட தலைவர் பிரிசில்லா மற்றும் பலர் உள்ளனர்.


    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- சர்வதேச உரிமைகள் கழக நிறுவனர் வலியுறுத்தல்

    • சர்வதேச உரிமைகள் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது
    • மாநகராட்சி எல்லை அருகே உள்ள சுங்கச்சாவடியை மாற்ற வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் டி.கே.அசோக்குமார் தலைமை தாங்கினார். நிறுவனர் தலைவர் எஸ்.சுரேஷ்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    தீர்மானங்கள்

    கூட்டத்தில் தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் கடல்வளம், நிலத்தடிநீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி எல்லை அருகே உள்ள சுங்கச்சாவடியை மாற்ற வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் காளிராஜ் பாண்டியன், இணை பொதுச் செயலாளர் சிவா, தலைமை கழக செயலாளர் செந்தில்குமார், மாநில அமைப்பாளர் செந்தில், மாநில துணை பொதுச் செயலாளர்கள் தீனதயாளன், சாமுவேல் பாண்டித்துரை, தூத்துக்குடி மாவட்ட தலைவர் பிரிசில்லா, மாவட்ட துணைத்தலைவர்கள் கோடீசுவரன், பாலசுப்பிரமணி, மீனவர் அணி பாஸ்கர், ஆன்மிக அணி மாநில துணை செயலாளர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சுரேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறும் போது, கொரோனா முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆகையால் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும், தமிழகத்தில் சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×