search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமராஜர் பிறந்த நாள் விழா: பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    காமராஜர் பிறந்த நாள் விழா: பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • காமராஜர் பிறந்த நாள் விழாவில் பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • இதற்கான ஏற்பாட்டை மாவட்ட என்.எம்.எஸ். கல்விக் திருவிழாகுழு பொறுப்பாளர் குகன் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த தினமான ஜூலை 15-ந்தேதி ஆண்டுதோறும் கல்வித்திருவிழாவாக நாடார் மஹாஜன சங்கம் கொண்டாடி வருகிறது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் அரசு, அரசு உதவி பெறும் சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளியில் படிக்கும் 6 முதல் 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டிகள் நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் பேச்சு, கட்டுரை போட்டி நடந்தது. இதில் பட்டிமன்ற புகழ் அவனி மாடசாமி, மதுரை பிரமுகர் சக்தி செல்வம், நாடார் மஹாஜன சங்க இணைச்செயலாளர் மோகன், ராமநாதபுரம் மாவட்ட நாடார் மஹாஜன பொறுப்பாளர்கள் பெரியகருப்பன், சேது, பரம்பை மயில்நேசமூர்த்தி, வேதாளை முருகேசன், குஞ்சார்வலசை ஜெயக்குமார், வட்டச் செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கு கொண்டனர். தேர்வான மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசுசும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, வடமலையான் மருத்துவமனை, என்.எம்.எஸ். கல்வி வழிகாட்டி அகாடமி ஆகியவை இணைந்து சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை மாவட்ட என்.எம்.எஸ். கல்விக் திருவிழாகுழு பொறுப்பாளர் குகன் செய்திருந்தார்.

    Next Story
    ×