search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வலியுறுத்தல்
    X

    ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வலியுறுத்தல்

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
    • சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பலரும் வெளிமாநிலங்களிலும், வெளியூர்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் எளிதில் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் கீழ்க்கண்ட ரெயில்களை சிறப்பு ரெயிலாக இயக்குவதத்திற்கு ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

    சென்னையிலிருந்து -ராமேசுவரம், கோவையிலிருந்து பழனி, திண்டுக்கல் வழியாக ராமேசுவரம், பெங்களுருவிலிருந்து கோவை, நாமக்கல், கருர், திண்டுக்கல் வழியாக ராமேசுவரம், கன்னியாகுமரியிலிருந்து ராமேசுவரம், பாலக்காட்டிலிருந்து ராமேசுவரம், சேலத்தி லிருந்து ஈரோடு, திருப்பூர், கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேசுவரம், ஐதராபாத்- ராமேசுவரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×