என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி செய்ய வேண்டும்
  X

  கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் பாசித் இல்யாஸ், கலெக்டர் ஜானி டாம் வா்கீசை சந்தித்து மனு கொடுத்தபோது எடுத்த படம்.

  அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி செய்ய வேண்டும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி செய்ய வேண்டும் என வி.சி.கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
  • கீழக்கரை நகரில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

  கீழக்கரை

  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் பாசித் இல்யாஸ், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வா்கீசை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

  கீழக்கரை நகரில் அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே முறையாக ஆய்வு செய்து கூடுதல் மருத்துவர்களை நியமித்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.

  வட்டாட்சியர் அலுவல கத்தில் இலவச பட்டா, அரசு விதவை மானிய தொகை, முதியோர் உதவித்தொகை சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழக்கரை நகராட்சியில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப்போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழக்கரை நகரில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

  Next Story
  ×