search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்  தண்ணீரை திருப்பி விடுவதில் கடைக்காரர்களுக்கு இடையே போட்டி
    X

    ஜே.சி.பி. எந்திரம் மூலம் தடுப்பு அமைக்கும் காட்சி.

    தாரமங்கலத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் தண்ணீரை திருப்பி விடுவதில் கடைக்காரர்களுக்கு இடையே போட்டி

    • காவிரி உபரிநீர் திறந்து விட்டப்பட்டதால் இங்குள்ள ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.
    • மழைநீர் தங்களது வீடு மற்றும் கடைகளில் புகாமல் இருக்க மக்கள் பொக்லின் எந்திரம் கொண்டு தடுப்பு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் காவிரி உபரிநீர் திறந்து விட்டப்பட்டதால் இங்குள்ள ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது. அப்போது ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அருகில் இருக்கும் குறுக்குப்பட்டி ஏரிக்கு செல்லும் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியதால் தண்ணீர் செல்ல உரிய பாதை இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து நெடுஞ்சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக ஒரு நீர்வழி பாதையை உருவாக்கி தற்காலிக தீர்வு ஏற்படுத்தினர். பின்னர் பொதுமக்களை அழைத்து ஓமலூர் தாசில்தார் தலைமையில், பொதுப்பணி துறைஅதிகாரிகளும் சேர்ந்து ஆய்வு கூட்டம் நடத்தினர். அப்போது ஏரியில் இருந்து வெளியேறும் அனைத்து நீர் வழி பாதைகளையும் அளவீடு செய்து நிரந்தர நீர்வழித்தடம் அமைக்கப்படும் என்று கூறி பொதுமக்கள், பட்டாதாரர்களிடம் கையெழுத்து வாங்கி சென்றனர்.

    அதன்பிறகு உபரிநீர் நிறுத்தப்பட்டது. மழையும் குறைந்து போனது. ஆனால் நீர் வழிப்பாதை அமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டவில்லை. தற்போது 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கி விட்டது. இரவு பெய்த கன மழையில் மீண்டும் ஏரியில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

    இதனால் மழை நீர் குடியிருப்பு பகுதியில் செல்கிறது. சாலைகளிலும் மழை நீர் வெள்ளம்போல ஓடுகிறது. இந்த மழைநீர் தங்களது வீடு மற்றும் கடைகளில் புகாமல் இருக்க மக்கள் பொக்லின் எந்திரம் கொண்டு தடுப்பு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் கடைக்காரர்கள் இடையே ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் ஏற்கனவே நெடுசாலையில் பெருக்கெடுத்து ஓடியது போல் மீண்டும் திருப்பி விட்டுள்ளனர். இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×