search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் குளக்கரையை தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
    X

    குளக்கரையில் கிடக்கும் குப்பை கழிவுகள்.

    பெரியகுளம் குளக்கரையை தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

    • கடைமடை பகுதி விவசாயிகள் சங்கம், பொதுமக்கள் பங்களிப்போடு தூர்வாரப்பட்டு குளத்திற்குள் குறுங்காடுகள் அமைக்கப்பட்டது.
    • கரையில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பெரியகுளத்தில் தண்ணீர் நிறைந்து கடல் போல் காட்சி அளித்தது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெரிய குளம் கரை பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகி றது.பேராவூரணி என பெயர் வர காரணமாக அமைந்த பெரிய ஊரணியாக இருந்து தற்போது பெரியகுளம் என்றழைக்கப்படும் குளத்தின் கரை குப்பைமே டாக காட்சி அளிக்கிறது.

    மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடை மடை பகுதி விவசாயிகள் சங்கம் (கைபா) பொதுமக்கள் பங்களிப்போடு தூர் வாரப்பட்டு குளத்திற்குள் குறுங்காடுகள் அமைக்க ப்பட்டது.மேலும் கரையில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். பெரியகுளத்தில் தண்ணீர் நிறைந்து கடல் போல் காட்சி அளித்தது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.தற்போது பேராவூரணியிலுருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள குளக்கரையில் தென்னை மர துண்டுகள், கட்டிடங்கள் இடிக்கப்பட்ட கழிவுகள், குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அதிகாலையில் அவ்வழியாக நடைபயிற்சி செல்வோர் அச்சத்துடன் கடக்க வேண்டியசூழல் உள்ளது. எனவே சம்பந்த ப்பட்ட துறையினர் உடனடியாக அப்பகுதியை சுத்தப்படுத்தி விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×