search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

    • கடந்த சில நாட்களாக தெரு குழாய்கள் மூலம் தண்ணீர் வருவதில்லை.
    • 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி- கல்லணை சாலையில் காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரை களில் கோவிலடி என்ற ஊர் அமைந்துள்ளது.

    கோவிலடி கிராமத்தில் கடந்த சில நாட்களாக தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வருவதில்லை. கோடை காலத்தில் குடிநீர் வருவதில்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை திடீரென்று கோவிலடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கொள்ளிடத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் பல கிராமங்களுக்கு சென்றாலும், கோவிலடி கிராமத்திற்கு மட்டும் தண்ணீர் வருவதில்லை.

    இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்கப்பட்டும், அதிகா ரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று புகார் கூறினர்.

    இதைத் தொடர்ந்து தோகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை இது குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இதனால் இந்த வழித்தடத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×