search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அபராதம்-கலெக்டர் அறிவிப்பு
    X

    கலெக்டர் ஆகாஷ்.

    தென்காசி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அபராதம்-கலெக்டர் அறிவிப்பு

    • கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் கவன குறைவாக இருப்பதால் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • கொரோனா தடுப்பூசி தவணை தவறிய நபர்கள் தங்களுக்கு அருகாமையில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொதுஇடங்களில் முக கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் கவன குறைவாக இருப்பதால் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணியும் போது சரியாக வாய் மற்றும் மூக்கு மூடியவாறு அணிதல் போன்ற நிலையான கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் மட்டுமே நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

    எனவே கொரோனா தடுப்பூசி தவணை தவறிய நபர்கள் தங்களுக்கு அருகாமையில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

    தென்காசி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி போடவேண்டிய வர்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 97.5 சதவீத நபர்களும், இரண்டாவது தவணையில்84.7 சதவீத நபர்களும் 15 வயதில் இருந்து 18 வயதிற்கு உட்பட்டவர்களில் முதல் தவணை93.5 சதவீத நபர்களும் இரண்டாவது தவணை 79.1 சதவீத நபர்களும் 12 வயதிலிருந்து 14 வயதிற்கு உட்பட்டவர்கள் முதல் தவணை 85.2 சதவீத நபர்களும் இரண்டாவது தவணை 67.71 சதவீத நபர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    பொதுஇடங்களில் முக கவசம் அணியாமல் இருப்பவர்கள், கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்காதவர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தற்பொழுது தமிழக அரசின் உத்தரவின்படி பொது சுகாதார சட்டத்தின் மூலம் ரூ.500 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா தொற்று பரவலை தென்காசி மாவட்டத்தில் கட்டுப்படுத்திட பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×