search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
    X

    கூட்டத்தில் ஐபெட்டோ அமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை பேசிய காட்சி.

    தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

    • தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற ஆசிரியை ஜெ.புஷ்பா எம்கோ ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
    • ஆசிரியர்கள் எவ்வித மன உளைச்சலுமின்றி, குழந்தைகளுக்கு நல்ல முறையில் கற்பிப்பதற்கு, அரசாணை 101,108 ஆகியவற்றை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என்றார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில் தமிழக ஆசிரியர் கூட்டணி முப்பெ ரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, வட்டாரத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் காசிலிங்கம் வரவேற்றார். மகளிரணிச் செயலாளர் நித்யா உறுதிமொழி வாசித்தார். முன்னாள் பொதுச் செயலாளர் கோ.முருகேசன் முப்பெரும் விழா குறித்து விளக்கவுரையாற்றினார்.

    ஐபெட்டோ அமைப்பின் அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் நம்பிராஜ், பொதுச் செயலாளர் வின்சென்ட்பால்ராஜ், பொருளாளர் சந்திர சேகர், வாழப்பாடி பேரூராட்சி தலைவர் கவிதா சக்கரவர்த்தி, இலக்கியப்பேரவை செயலர் சிவ.எம்கோ, கவிஞர். பெரியார்மன்னன், முனைவர்.ஜவஹர் ஆகியோர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் ஷபிராபானு, ஓய்வு பெற்ற ஆசிரியை குணசுந்தரி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விருது பெற்ற ஆசிரியர்கள் செந்தில்குமார், மீனா, தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற ஆசிரியை ஜெ.புஷ்பா எம்கோ ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    இவ்விழாவில், வா.அண்ணாமலை பேசுகை யில், 'தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஆசிரியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆசிரியர்களின் பணிச்சுமையும், உயரதி காரிகளின் கெடுபிடிகளும் அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள் எவ்வித மன உளைச்சலுமின்றி, குழந்தைகளுக்கு நல்ல முறையில் கற்பிப்பதற்கு, அரசாணை 101,108 ஆகியவற்றை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என்றார். இந்த விழாவில், வாழப்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் சாந்தக்குமாரி சரவணன், குமார், பேளூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் எல்ஐசி ராஜா, வட்டார கல்வி அலுவலர்கள் முனியப்பன், பிரபுகுமார், ஞானசேகரன், அன்பழகன், அரிமா சங்கத் தலைவர் மருத்துவர் செந்தில்குமார், தொழிலதிபர் சிற்றரசு, இலக்கியப்பேரவை நிர்வாகிகள் செந்தில்குமார், முனிரத்தினம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் அமுதா நன்றி கூறினார்.

    Next Story
    ×