search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய  கராத்தே போட்டி:  சாதனை படைத்த விழுப்புரம்மாணவர்களுக்கு பாராட்டு
    X

    கராத்தே போட்டியில் சாதனை படைத்த விழுப்புரம் மாணவர்களை படத்தில் காணலாம். 

    தேசிய கராத்தே போட்டி: சாதனை படைத்த விழுப்புரம்மாணவர்களுக்கு பாராட்டு

    • தேசிய கராத்தே போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • விழுப்புரம் மாவட்டத்திற்க்கு பெறுமை சேர்த்த மாணவர்களை பாராட்டினர்,

    விழுப்புரம்,

    சேலம் தனியா ர்பொறியியல் கல்லூரியில் 8-வது தேசிய அளவிலான ஒபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சார்ந்த ஜுனியர், சீனியர் மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் விழுப்புரம் ஜார்ஜ் கார்னேஷன் கிளப் வளாகத்தில் பயிற்சியாளர் சென்சாய் செல்வகுமாரிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஜெயஸ்ரீ, அரிகரன், குருபிரசாத், வளர்மதி, ஷேக்ஆப்தாப், போகேஷ்வரன், கமலேஷ், சந்தோஷ், நிஷாந்த், விக்னேஷ்வரன், சஞ்சய், பாலகுமரன், ஷேக்ரிகான், அஸ்ரபி, அப்ரிகான், அப்ஷா பேகம், காளிதாஸ் ஆகியோர்கள் பங்கேற்றனர். இதில் கட்டா பிரிவில் 15 மாணவர்களும் கும்தே பிரிவில் 17 மாணவர்களும் கேடயம் மற்றும் சான்றிதழ் பெற்று சாதனை படைத்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்திற்க்கு பெறுமை சேர்த்த மாணவர்களை பயிற்சியாளர் சென்சாய் செல்வகுமார் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் சென்சாய் வைத்தியநாதன் மற்றும் பலரும் பாராட்டினர்.

    Next Story
    ×